2026 டிசம்பரில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ஆசிரியர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள சிறப்பு பயிற்சி - Minnalkalviseithi

Latest

Saturday, 24 October 2026

2026 டிசம்பரில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ஆசிரியர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள சிறப்பு பயிற்சி

2026 டிசம்பரில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ஆசிரியர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள சிறப்பு பயிற்சி 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின்செயல்முறைகள், சென்னை-06. ந.க.எண்.44750/எப்-3/2024 நாள். 24.10.2026. பொருள் பயிற்சி - பள்ளிக்கல்வி துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான நேரடி பயிற்சியினை 30.10.2026 முதல் அரசு விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்களில் தொடர் பயிற்சியினை மாவட்டங்களில் வழங்குதல் - அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக. 

பார்வை 1. அரசாணை (நிலை) எண்.231, பள்ளிக்கல்வித் துறை, நாள்.13.10.2025. 2. சென்னை-09, தலைமைச் செயலகம், பள்ளிக்கல்வித் துறை, அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் எண்.449/ஆ.தே.வா/2025, நாள்.13.10.2025 3. இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைக் கடிதம் ந.க.எண்.44750/எஃப் -3/2024 நாள்.22.10.2025 பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தற்போது சிறப்பு ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர் தருதித் தேர்வினை வருகின்ற டிசம்பர் 2026 ஆம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், இத்தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 

எனவே, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, டிசம்பர் 2026-இல் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வினை (Special TET) நேரடிப் பயிற்சியாக வழங்கவேண்டியுள்ளது. எதிர்கொள்ளும் வகையில் இப்பயிற்சியினை நேரடி பயிற்சியாக கீழ்க்கண்டவாறு பள்ளிப் பணிகள் பாதிக்காவண்ணம் ஆசிரியர்களின் வசதிக்கேற்றவாறு சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை நாள்களில் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்படவுள்ளது. வார நாள்கள் (சனி மற்றும் ஞாயிறு 


எனவே, ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பங்கேற்க உரிய அறிவுரைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவவருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சியினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இப்பயிற்சி முடிவுற்ற பின்னர் அறிக்கை விவரத்துடன் இந்நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு அறிவுறுத்தப்படுகிறது

No comments:

Post a Comment