ஜப்பானில் நடைபெற்ற 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகளைப் பாராட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
ஜப்பானில் நடைபெற்ற 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளமைக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், தெரிவித்துக் கொள்கிறேன். நல்வாழ்த்துகளையும்
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் இடையறாத பயிற்சி, தளராத மன உறுதி, இலக்கை அடைவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் பல்வேறு சவால்களைக் கடந்து, பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள ஒவ்வொரு வீரர். வீராங்கனையின் உழைப்பும். வெற்றியும் போற்றத்தக்கது. அவர்களின் சாதனைப் பயணம் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.
அவ்வீரர். வீராங்கனைகளின் சாதனைகள், தமிழ்நாட்டின் விளையாட்டுத் திறனையும், இளைஞர்களின் ஆற்றலையும் உலகறியச் செய்து, சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளது.
சாதனை புரிந்துள்ள வீரர், வீராங்கனைகளுக்கும், சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கும் என்றும் உறுதுணையாக இருந்து. அவர்களின் திறமைகள் மேலும் வளரவும், வெற்றிகள் பல குவிக்கவும் அனைத்து நிலையிலும் தமிழ்நாடு அரசு துணை நிற்கும்.

No comments:
Post a Comment