தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்
இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்
பள்ளிக் கல்வி அரசு / அரசு உதவிபெறும் மற்றும் அனைத்து வகை
தனியார் பள்ளிகள்
பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை,
மேற்கூரைகள், சுற்றுச்சுவர் பாதுகாப்பு, இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள்
மற்றும் வளாக உட்கட்டமைப்பு பராமரிப்பு, குழந்தைகளின் பாதுகாப்பை
உறுதி செய்தல் - விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள்
வழங்குதல் - சார்பு.
பார்வை 1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் (முகூபொ) மற்றும் தொடக்கக் கல்வி
இயக்குநரின் இணைச் செயல்முறைகள். ந.க.எண். 050103/எம்1/இ1/26,
1516T: 15.09.2026.
2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்
இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள், ந.க.எண்.050103/எம்1/இ1/
26, நாள்: 15.10.2026
3. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்கள்
மற்றும் அரசு செயலாளரின் ஆய்வுக் கூட்ட அறிவுறுத்தல்கள்.
தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார்
சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்வதில்
பள்ளிக் கட்டடங்கள் மற்றும் வளாக உட்கட்டமைப்புகளின் நிலைத்தன்மை மிக
முக்கிய காரணியாக உள்ளது.
தற்போது வடகிழக்குப் பருவமழைக்காலம் நிலவுவதாலும்,
இயற்கை இடர்பாடுகளினாலும் பள்ளிக் கட்டடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை
முன்கூட்டியே தடுத்து மாணவர்களின் பாதுகாப்பினை 100% உறுதி செய்யும் பொருட்டு
கட்டடப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.
எனவே. பள்ளிக் கட்டடங்கள், சுற்றுச்சுவர், மேற்கூரைகள், திறந்தநிலை
அமைப்புகள் மற்றும் வளாகப் பராமரிப்பு தொடர்பாகப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
மற்றும் கல்வி அலுவலர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய குறிப்பிட்ட
வழிகாட்டுதல்கள் பின்வருமாறு வழங்கப்படுகின்றன.
பள்ளிக் கட்டடங்கள் மற்றும் வளாக உட்கட்டமைப்பு சார்ந்த விரிவான அறிவுரைகள்:
1. கட்டட உறுதித்தன்மை மற்றும் மேற்கூரைப் பராமரிப்பு:
மேற்கூரை ஆய்வு: பள்ளியில் உள்ள அனைத்து கட்டடங்களின்
மேற்கூரைகளின் ஸ்திரத்தன்மையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
மழைநீர் தேங்காமல் வெளியேற்றுதல்: மொட்டை மாடி மற்றும் மேற்கூரைகளில்
உள்ள மழைநீர் வடிகால் குழாய்களில் (Rainwater Drainage Pipes) அடைப்புகள்
ஏதேனும் இருப்பின் அவற்றை உடனடியாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
மேற்கூரைகளில் எக்காரணம் கொண்டும் மழைநீர் தேங்க அனுமதிக்கக் கூடாது.
கைப்பிடிச்சுவர் மற்றும் சன்ஷேட் (Sunshade): கட்டட மேற்கூரையின் கைப்பிடிச்
சுவர்கள் (Parapet Walls). ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு மேல்
அமைக்கப்பட்டுள்ள வெயில்/மழை மறைப்புச் சுவர்கள் (Sunshades) ஆகியவை
விரிசல் அடைந்துள்ளதா அல்லது பலவீனமாக உள்ளதா என்பதை ஆய்வு
செய்து, தேவைப்படின் உடனடியாகப் பழுதுநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. ஈரப்பதம் மற்றும் பள்ளி சுற்றுச்சுவர் (Compound Wal) பாதுகாப்பு:
* சுற்றுச்சுவர் ஸ்திரத்தன்மை: தொடர் மழை காரணமாகப் பள்ளியின்
சுற்றுச்சுவர்கள் நிலத்தடி நீரினாலும் மழையினாலும் அதிக ஈரப்பதத்துடன்
காணப்படலாம். இதனால் சுவர் சரியும் அபாயம் உள்ளதா என்பதைத் தினசரி
கண்காணிக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட மண்டலம் (Barricading): உறுதித்தன்மையற்ற, சேதமடைந்த
அல்லது விரிசல் விழுந்த சுற்றுச்சுவர்கள் கண்டறியப்பட்டால், அப்பகுதிக்கு
மாணவர்கள் அருகில் செல்லாதவாறு முள்வேலி, தடுப்புகள் (Barricades) அல்லது
எச்சரிக்கைப் பலகைகள் அமைத்து அந்த பகுதியை உடனடியாகத் தடை செய்ய
வேண்டும்.
3. சேதமடைந்த வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைக் கட்டடங்கள்:
பாதுகாப்பற்ற கட்டடங்களை மூடிவைத்தல் மழையினாலோ அல்லது பிற
காரணங்களினாலோ வகுப்பறை, ஆய்வகம் அல்லது கழிப்பறைக் கட்டடங்களின்
சுவர்கள் மற்றும் கூரைகளில் விரிசல், நீர்க்கசிவு போன்றவை காணப்பட்டால்,
அத்தகைய கட்டடங்களை மாணவர்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது.
பூட்டி சீல் வைத்தல்: பாதுகாப்பற்ற கட்டடங்களை உடனடியாகப் பூட்டி வைக்க
வேண்டும். தகுதிவாய்ந்த பொறியாளரால் ஆய்வு செய்யப்பட்டு 'பாதுகாப்பானது'
என எழுத்துப்பூர்வ சான்றிதழ் பெறும் வரை அக்கட்டடங்களை மீண்டும் திறக்கக்
கூடாது.
4. பயன்பாடற்ற மற்றும் இடிக்கப்பட வேண்டிய நிலையிலுள்ள கட்டடங்கள்:
முழுமையான கணக்கெடுப்பு: பள்ளி வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற, மிகவும்
பழுதடைந்த மற்றும் இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டடங்களை உடனடியாக
அடையாளம் காண வேண்டும்.
அகற்றும் நடவடிக்கை: இத்தகைய கட்டடங்களை உள்ளாட்சி அமைப்புகள்
(ஊராட்சி/பேரூராட்சி/நகராட்சி), பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தைத் தொடர்புகொண்டு. உரிய ஒப்புதல் பெற்று போர்க்கால
அடிப்படையில் இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்காலிகத் தடுப்பு: இடிப்புப் பணிகள் நிறைவடையும் வரை, அக்கட்டடங்களின்
50 அடி சுற்றளவிற்கு மாணவர்கள் எவரும் செல்லாத வகையில் தடுப்புகளை
அமைத்துப் பாதுகாக்க வேண்டும்.
5. புதிய கட்டடக் கட்டுமானங்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் இடங்கள்:
ஆழமான குழிகள் மற்றும் பள்ளங்கள்: பள்ளி வளாகத்திற்குள் புதிய கட்டடப்
பணிகள் அல்லது பராமரிப்புப் பணிகள் நடைபெறும் போது தோண்டப்படும்
ஆழமான அடித்தளக் குழிகள், வாய்க்கால்கள் மற்றும் பள்ளங்களைச் சுற்றி
பாதுகாப்பான உயரமான தடுப்புகள் (Hard Barricades) அமைக்கப்பட வேண்டும்.
கட்டுமானப் பொருட்கள் பாதுகாப்பு: சிமெண்ட், செங்கல், கம்பிகள்,
மரக்கட்டைகள் போன்ற கட்டுமானப் பொருட்கள் மாணவர்கள் கூடும்
இடங்களில் ஆபத்தான முறையில் குவிக்கப்படாமல், தனியாக அடைக்கப்பட்ட
பாதுகாப்பான பகுதியில் வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
6. தரைமட்டத் தொட்டிகள், திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் கழிகநீர்த் தொட்டிகள்:
* உறுதியான மூடிகள்: பள்ளி வளாகத்தில் உள்ள பயன்பாட்டில் உள்ள அல்லது
பயன்பாடற்ற திறந்தவெளி கிணறுகள், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள்
(Sump), மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு மற்றும் கழிவுநீர்த் தொட்டிகள் (Septic
Tarks) அனைத்தும் உறுதியான கான்கிரீட் அல்லது இரும்பு மூடிகள் கொண்டு
பூட்டப்பட்ட நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் (OHT): கட்டடங்களின் மேல் உள்ள
சின்டெக்ஸ் அல்லது கான்கிரீட் மேல்நிலைத் தொட்டிகளின் உறுதித்தன்மை
மற்றும் தாங்குதளங்களின் பலத்தை ஆய்வு செய்து விபத்துக்கள் நேராதவாறு
பராமரிக்க வேண்டும்.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில்
உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக,
மேற்கண்ட கட்டடப் பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்து வகை பள்ளிகளிலும் நூறு
சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைத் தீவிரமாக ஆய்வு
வேண்டும்.
கட்டடப் பராமரிப்பில் ஏதேனும் குறைபாடுகளோ அல்லது பாதுகாப்பு
அச்சுறுத்தல்களோ கண்டறியப்பட்டால். உடனடியாக மாற்று ஏற்பாடுகளைச் செய்து
மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். இதில் எவ்வித சுணக்கமும்
இன்றி செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment