பழம்பெரும் நடிகை திருமதி எம் என் ராஜம் மற்றும் மூத்த இயக்குனர் திரு எஸ் பி
முத்துராமன் ஆகியோருக்கு 2024, 2025 ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை
வித்தகர் விருது அறிவிப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின்அவர்கள் உத்தரவு | தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும்
வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்
விருது வழங்கப்படும் எனச் சட்டமன்றப் பேரவையில் 27.4.2022 அன்று மாண்புமிகு
செய்தித்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2022 ஆம்
ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது திரையுலகில் சிறந்து விளங்கிய
வாழ்நாள் சாதனையாளரான திரு.ஆரூர்தாஸ் அவர்களுக்கும். 2023 ஆம் ஆண்டுக்கான கலைஞர்
நினைவு கலைத்துறை வித்தகர் விருது கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும். முத்தமிழறிஞர்
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில்
சிறப்பினமாக 2023ஆம் ஆண்டுக்கு மட்டும் கூடுதலாக கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்
விருது பின்னணிப் பாடகி திருமதி பி.சுசீலா அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
2024-ஆம்ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது திருமதி.எம்.என்.ராஜம்
தேர்வு தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என். ராஜம்
அவர்கள், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949இல் குழந்தை
நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமான இவர், 1950கள் மற்றும் 1960களில் முன்னணி
நாயகியாக விளங்கினார். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை,
நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், மங்கையர் திலகம் போன்ற பல்வேறு
வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றார். 200க்கும் மேற்பட்ட தமிழ்
திரைப்படங்களில் நடித்த இவர், பின்னர் தாயார், மாமியார் போன்ற பல்வேறு துணை
வேடங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
அரங்கேற்றம், ஊருக்கு உழைப்பவன். போன்ற படங்களில் அவர் ஏற்ற அன்னை வேடங்கள் மறக்க
முடியாதவை. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினராகவும் பதிவான
திருமதி எம் என் ராஜம் அவர்கள், தனது நீண்டகால கலைச் சேவைக்காக பல விருதுகளைப்
பெற்ற பெருமைக்குரியவர். இத்தகைய பெருமைக்குரிய பழம்பெரும் நடிகை திருமதி
எம்.என்.ராஜம் அவர்கள் 2024ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2025-ஆம்ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை
வித்தகர் விருது முதுபெரும் திரைப்படஇயக்குநர் திரு.எஸ்.பி. முத்துராமன் தேர்வு
திரு.எஸ். பி. முத்துராமன் பிரபலமாக எஸ்.பி.எம். என்று அழைக்கப்படுபவர். தமிழ்த்
திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவராவார். 1935 ஏப்ரல் 7-ஆம் தேதி
காரைக்குடியில் பிறந்த இவர், 1960-இல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி
இயக்குநராகத் தொடங்கி, பின்னர் 1970கள் முதல் 1990கள் வரை தமிழ் சினிமாவில் மிகவும்
வெற்றிகரமான வணிக இயக்குநராக 70-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார்.
உயர்ந்தார். இவரது சிறந்த படங்களில் ஆறிலிருந்து அறுபது வரை. புவனா ஒரு
கேள்விக்குறி (1977). ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (1978). முரட்டுக்காளை,
எங்கேயோ கேட்ட குரல் (1982), சகலகலா வல்லவன் (1985) போன்றவை முக்கியமானவை. தமிழ்
திரைப்படத் துறைக்கு அளித்த பங்களிப்புகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
எளிமை, நேர்மை, பணிவு ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற இவர். தமிழ் சினிமாவின் வணிக
வெற்றியை தீர்மானித்த மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வரலாற்றில்
இடம்பிடித்துள்ளார்.
கலைத்துறையில் திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன்
அவர்களின் சிறந்த பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, இவர் 2025ஆம் 2 ஆண்டிற்கான கலைஞர்
நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கலைஞர் நினைவு
கலைத்துறை வித்தகர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பழம்பெரும் நடிகை
திருமதி.எம்.என்.ராஜம், திரைப்பட இயக்குனர் திரு.எஸ்.பி. முத்துராமன் ஆகிய
இருவருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ரொக்கப் பரிசாக தலா 10 இலட்சம்
ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும்.

No comments:
Post a Comment