அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம் 2026–2027 - Minnalkalviseithi

Latest

Wednesday, 6 May 2026

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம் 2026–2027

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம் 2026–2027


செய்தி வெளியீடு எண்: 746
நாள்: 04.05.2026

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம் – 2026–2027 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர், மதம்மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில “அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் 2026–2027 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.


தகுதி நிபந்தனைகள்

  1. QS World University Ranking பட்டியலில் முதல் 1000 இடங்களுக்குள் உள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டம் (Master’s Degree) அல்லது முனைவர் ஆராய்ச்சிப் படிப்பில் (Ph.D. / Post Doctoral Research) சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

  2. Master’s Degree:
    01.04.2026 அன்று 35 வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது.

  3. Ph.D. / Post Doctoral Research:
    01.04.2026 அன்று 40 வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது.

  4. குடும்ப ஆண்டு வருமானம்:
    ரூ.12.00 இலட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும்.

  5. விண்ணப்பங்கள், மாணாக்கர்கள் சேர்க்கை பெறும் பல்கலைக்கழகங்களின் QS World University Ranking தரவரிசையின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும்.

மேலும், இத்திட்டம் தொடர்பான அரசாணைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் விரிவான விவரங்களை
www.tnadw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் மேற்கண்ட விவரங்களை முழுமையாக படித்து பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


விண்ணப்பிக்கும் முறை

2026–2027 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் மட்டுமே பெறப்படும்.

தகுதியுடைய மாணவர்கள் 05.05.2026 முதல் 05.06.2026 வரை தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்:

நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அல்லது கால அவகாசம் முடிந்த பின்னரோ சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.


விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள்

  1. வெளிநாட்டு பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட சேர்க்கை கடிதம்
    (University Offer / Admission Letter – Conditional / Unconditional)

  2. சாதிச் சான்றிதழ் (இணைய வழியில் பெறப்பட்டது)

  3. சமீபத்திய குடும்ப வருமானச் சான்றிதழ் (இணைய வழியில் பெறப்பட்டது)

  4. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பு (UG) மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு (PG) மதிப்பெண் சான்றிதழ் (If applicable)

  5. இளநிலை / முதுநிலை பட்டப்படிப்புச் சான்றிதழ்
    (Degree Certificate / Provisional Certificate / Course Completion Certificate)

  6. ஆதார் அட்டை (Aadhar Card)

  7. குடும்ப அட்டை (Ration Card)

  8. கடவுச்சீட்டு (Passport)

  9. பெற்றோர் / விண்ணப்பதாரரின் சமீபத்திய 3 மாத சம்பளச் சீட்டு நகல்
    (Latest three month payslip – If applicable)

  10. பெற்றோர் / விண்ணப்பதாரரின் வருமான வரி தாக்கல் (ITR) ஆவணங்கள் – If applicable

  11. மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை (UDID Card) – If applicable

  12. சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்


விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி, விண்ணப்பத்தை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


சந்தேகங்களுக்கு தொடர்பு

விண்ணப்பித்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு:

📞 1800-599-7638
(கட்டணமில்லா தொலைபேசி எண்)


வெளியீடு:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை – 9.

No comments:

Post a Comment