அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Minnalkalviseithi

Latest

Saturday, 27 December 2025

அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பார்வை 8 இல் காணும் இயக்குநரின் செயல்முறைகளின் மீது அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களின் (தொடக்கக் கல்வி) உடனடி கவனம் ஈர்க்கப்படுகிறது. இதில், தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கு மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணியாளர் நிர்ணய விவரங்களை சரிபார்ப்பிற்காக நியமிக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரின் ஒப்புதலை பெற்று தொகுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு, தொகுப்பு பணியினை மேற்கொள்ளும்பொருட்டு சமர்ப்பித்திடவும். அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதன்படி, பார்வை 9 முதல் 10 வரையிலான கடிதங்களின் வாயிலாக தொகுப்பறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. 

மேலும், மேற்படி தனியார் பள்ளி சட்டம் மற்றும் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கால வரையறைக்குள் பணியாளர் நிர்ணய அறிக்கைகளை சார்ந்த பள்ளி நிருவாகங்களுக்கு வழங்கிடவும். மேற்படி பணியாளர் நிர்ணய ஆணைகளின்படி, ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்படும் பணியிடங்களை. பார்வை-7-ல் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி பணிநிரவல் / மாற்றுப்பணி ஆணைகள் வழங்கிட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், அதன் விவரத்தினை உடன் இவ்வியக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், இப்பொருள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரம் ஏதும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து இவ்வியக்ககம் பெறப்படாமல் உள்ளது. ட்டுள்ள கண்டறியப்பட்ட எனவே, மேற்கண்டவாறு ஆசிரியருடன் உபரி எனக் பணியிடங்களை பார்வை 7- இல் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி பணிநிரவல் / மாற்றுப்பணி ஆணைகளை உடன் வழங்கிட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், இப்பொருள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையினி விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 23.01.2026 க்குள் இவ்வியக்ககம் அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment