என் கனவு என் எதிர்காலம் - என்ற புதிய இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய அழைப்பு - Minnalkalviseithi

Latest

Saturday, 7 February 2026

என் கனவு என் எதிர்காலம் - என்ற புதிய இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய அழைப்பு

"என் கனவு என் எதிர்காலம்" என்ற புதிய இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய அழைப்பு 
தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறிய, அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக கேட்டறிந்து, அதன் அடிப்படையில் புதிய திட்டங்களை தொடங்க, "உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 9.01.2026 அன்று திருவள் ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. 

ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகளை சேகரிப்பதுடன், இளைய தலைமுறையினரின் எண்ணங்களையும் அறிந்து அவர்களின் கனவுகளை சேகரிக்க, 'என் கனவு, என் எதிர்காலம்' என்ற திட்டத்தினை செயல்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தினை செயல்படுத்தி. இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் பொருட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம், 'என் கனவு. என் எதிர்காலம்' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 18 முதல் 29 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்காக, இளைஞர் கனவு இணையதளம் (Youth Dream Portal) தொடங்கப்படுகிறது. இளைஞர்கள் QR குறியீடு அல்லது enkanavu.tn.gov.in என்ற இணையத்தளம் மூலம் பதிவு செய்யப்படும் கனவுகளின் அடிப்படையில். 2030-ஆம் ஆண்டு தங்களது லட்சிய கனவுகளை திட்டமிட்டு அடைந்திட உதவிடும் வகையில், இளைஞர் நலனிற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அவர்களின் எதிர்கால கனவுகள் நிறைவேற்றப்படும். "என் கனவு என் எதிர்காலம்" என்ற இப்புதிய இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்து பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment