2025 - 2026 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை (NMMS) தேர்வு
10.01.2026 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு
பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளித்
தலைமையாசிரியர்கள் மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவங்களை 12.12.2025 முதல்
15.12.2025 -க்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்களிடம்
20.12.2025-க்குள் ஒப்படைக்க வேண்டும் என தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு
பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும் மாவட்டக் கல்வி
அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இத்துடன் இணைத்தனுப்பப்படும் அறிவிப்பினையும்
அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி /
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்
கொள்ளப்படுகிறது.பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்
1. NMMSதேர்வில்
2025-2026 கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர் கலந்து கொள்ளலாம்.
2. உதவித் தொகை: தேர்வில் வெற்றி பெறும் மாணவ /மாணவியருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12
ஆம் (+2) வகுப்பு வரை ஆண்டிற்கு ரூ.12000/- உதவித்தொகை வழங்கப்படும்.
3. தகுதி அரசு
பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி /ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளிகளில் இக்கல்வி ஆண்டில் 8 ஆம் வகுப்பு பயில வேண்டும். குடும்ப ஆண்டு
வருமானம் ரூ. 3.50,000/- ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. விண்ணப்பிக்கும் முறை:
NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் / பெற்றோர்களுக்கு கீழ்க்காணும்
விதிமுறைகளை அறிவுறுத்துமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வில் பங்கு பெற மாணவ /மாணவிகள் தாம் பயிலும் பள்ளி
தலைமை ஆசிரியரை அணுகி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். NMMS தேர்வுக்கு
விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமது பெயர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில்
எவ்வாறு பதிய வேண்டுமோ அதன்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல் வேண்டும். மாணவரின்
பெற்றோர் பயன்படுத்தும் நடைமுறையில் உள்ள கைபேசி எண்ணையே அளிக்க வேண்டும். உதவித்
தொகை சார்ந்து அவ்வப்போது குறுஞ்செய்தி அல்லது கடவுச்சொல் (OTP), குறிப்பிடப்படும்
கைப்பேசி எண்ணிற்கே அனுப்பப்படும் என்பதால் அக்கைப்பேசி எண்ணை குறைந்தது ஐந்து
ஆண்டுகளுக்கு மாற்றாமல் இருக்கவேண்டும். மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி
அமைந்திருக்கும் மாவட்டத்தையே குறிப்பிட வேண்டும். தாங்கள் குடியிருக்கும்
மாவட்டத்தைக் குறிப்பிடக் கூடாது.
5..NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள்
விவரத்தினை DGE Portal-ல் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்யும் போது
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் EMIS இணையதளத்தில் உள்ள
மாணவரின் விவரங்களுடன் சரியாக உள்ளதாக என்பதை உறுதி செய்த பின், திருத்தங்கள்
ஏதுமிருப்பின் EMIS இணையதளத்தில் பதிவு செய்த பிறகு DGE Portal ல் பதிவேற்றம் செய்ய
வேண்டும். பெயர் மற்றும் கைபேசி எண் மாணவர் பெயர், தந்தை / பாதுகாவலர் பெயர்,
பிறந்த தேதி, ஆதார் எண், பாலினம், கைப்பேசி எண் போன்ற விவரங்கள் ஆதார் அட்டையில்
உள்ள விவரங்கள் மற்றும் EMIS இணையதளத்தில் உள்ள விவரங்களுடன் ஒத்திருக்கவேண்டும்.
6.ஆன்லைன் கட்டணம்: ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) விண்ணப்பப் படிவத்துடன் பணமாக
பள்ளியின் தலைமையாசிரியரிடம் செலுத்த வேண்டும். 7.தேர்வு முறை: இத்தேர்வு இரண்டு
பகுதிகளைக் கொண்டது. பகுதி 1- மனத்திறன் தேர்வு (Mental Ability Test) (MAT) 11-
(Scholastic Aptitude Test) (SAT) 8. பாடத்திட்டம்: படிப்புதவித் தேர்வு பகுதி I
மற்றும் II-னைப் பொறுத்தமட்டில் ஏழாம் வகுப்பிற்குரிய முழுப்பாடமும், எட்டாம்
வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்பகுதி முழுவதும் பயில வேண்டும்.
இப்பகுதியில் கணிதம் 20, அறிவியல் 35, சமூக அறிவியல் 35 என 90 வினாக்கள்
கேட்கப்படும். மனத்திறன் தேர்வைப் பொறுத்த மட்டில் பாடப்பகுதி நிர்ணயமில்லை.
இப்பகுதியில் பொதுவான 90 கேள்விகள் கேட்கப்படும். மேலும், இத்தேர்வு சார்ந்து
பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள 'NMMS' Guidelines கருத்தில் கொள்ளப்பட
வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேசிய வருவாய்வழி மற்றும்
திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை 2025 - 2026 ஆம் ஆண்டில்
எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க
மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித்
தொகை திட்டத் தேர்வு (NMMS) அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டு 10.01.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான வெற்று
விண்ணப்பங்களை 12.12.2025 15.12.2025 வரை இத்துறையின் www.dge1.tn.gov.in என்ற
இணையதளம் வழியாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க
தகுதியுடையோர்: தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி,
நகராட்சி மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டும்) 2025 2026 கல்வி ஆண்டில்
எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ /மாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம்
ரூ.3,50,000/-க்கு (ரூபாய் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) மிகாமல்
இருந்தால் மட்டுமே இத்தேர்வு எழுத தகுதியுடையவர் ஆவார்.
விண்ணப்பிக்கும் முறை:
1.
NMMS- தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின்
மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தலைமையாசிரியர்கள் தேவையான வெற்று
விண்ணப்பங்களை 12.12.2025 முதல் 15.12.2025 வரை www.dge1.tn.gov.in என்ற இணையதளம்
மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2. தலைமை ஆசிரியர்கள் வெற்று
விண்ணப்பங்களை நடப்புக் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் தகுதியுடைய
மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும்.
3.
புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாம் பயிலும்
பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஆன்லைன் கட்டணம் ரூ.50/- சேர்த்து 20.12.2025-க்குள்
ஒப்படைத்தல் வேண்டும்.
4. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆன் லைனில் பதிவேற்றம்
செய்ய வேண்டிய நாட்கள். Online கட்டணம் செலுத்தும் வழிமுறை மற்றும் இணையதள முகவரி
குறித்தான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
5. பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய
நாட்கள் குறித்த விவரம் பெறப்பட்டவுடன், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்
அருகிலுள்ள வட்டார கல்வி அலுவலரின் உதவியுடன் இணையதள வசதி கொண்ட உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளிகளில் தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள User Id / Password
பயன்படுத்தி மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகப் பதிவு செய்தல் வேண்டும்.
6. தலைமையாசிரியர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்தபின் அனைத்து விண்ணப்பங்களையும்
தங்கள் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
7. மேலும், பதிவேற்றம் முடிந்தவுடன் ஒரு
தேர்வருக்கு ரூ.50/- வீதம் தேர்வுக் கட்டணம் செலுத்திய பிறகு பதிவேற்றம்
செய்யப்பட்ட தேர்வர்களின் விவரம் (Summary Report) சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்
தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டிய நாள் குறித்துப் பின்னர்
தெரிவிக்கப்படும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் இவ்வலுவலகத்தில்
அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் கட்டாயமாக
நிராகரிக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. புறச்சரக பதிவெண் கொண்டு
தேர்வெழுத தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

No comments:
Post a Comment