மேல்நிலைப்பள்ளிகளின் பார்வை 1-இன் படி தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் போன்று
மாவட்டங்களில் / வட்டார அளவில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் "வெற்றிப் பள்ளிகளாக"
தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை மையப்பள்ளியாகக் கொண்டு சுற்று வட்டாரங்களிலுள்ள
அனைத்து 12-ம்வகுப்பு மாணவர்கள் சனிக்கிழமை தோறும் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு
JEE/NEET/CUET தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இது வரை 216
வட்டாரங்களில் 272 பள்ளிகளில் வாரந்தோறும் சனிக் கிழமைகளில் பயிற்சிகள்
வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 21-01-2026 முதல் நடைபெறவுள்ள JEE தேர்வுகளை
முன்னிட்டு வெற்றிப் பள்ளிகளின் வாராந்திர வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்று வரும்
அரசு பள்ளி மாணவர்களின் தேர்வு தயாரிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாநில அளவிலான
JEE உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உண்டு உறைவிடப்
பயிற்சி முகாம் 24.12.2025 முதல் 18.01.2026 வரை நடைபெற உள்ளது.
மாணவர்கள்
வரவிருக்கும் JEE தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் பாடவாரியாக பயிற்சி மாதிரித்
தேர்வுகள் மற்றும் நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். கடலூர் மாவட்ட
ஆட்சித் தலைவரின் வழிகாட்டுதலில் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால்
இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, இம்முகாமில் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின்
ஆசிரியர்கள் மற்றும் பாட நிபுணர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குவார்கள்.
போட்டித் தேர்வுக்குத் தேவையான கற்றல் பயிற்சி தாள்கள் தமிழ்நாடு மாதிரிப்
பள்ளிகளால் வழங்கப்படும். தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு
மாவட்டங்களில் இருந்து இம்முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயர்
பட்டியல் இணைப்பு-1இல் இணைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் மாணவர்களின் பங்கேற்பை
உறுதி செய்யவும், முகாம் சிறப்புற நடைபெறவும் கீழ்காணும் வகையில் மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
1. பயிற்சி முகாம் விவரங்கள்: L
நாட்கள் - 24-12-2025 முதல் 18-01-2026 வரை. H. இடம் - கடலூர் மாவட்ட அரசு மாதிரிப்
பள்ளி, கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகம்,
நெல்லிக்குப்பம் முதன்மைச் சாலை, எஸ். குமாரபுரம், கடலூர்-607 109.
2. பயிற்சி
முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள்: L பாட வாரியான பயிற்சிகள். ii. இணைய வழி
(Online) மாதிரித் தேர்வுகள். ii. நிபுணர்களின் வழிகாட்டுதல். iv. உணவு மற்றும்
தங்குமிடம். V. முன்னாள் மாணவர் வழிகாட்டல் மற்றும் வழிநடத்தல்.
1. மாணவர் விவரம்:
வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின்கீழ் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் கடலூர்
மாவட்டத்திற்கு அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் மூலம்
தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை:

No comments:
Post a Comment