சிவகங்கை மாவட்டம்,
இளையான்குடி வட்டம், ஆழிமதுரை கிராமத்திலுள்ள கண்மாயில் மூழ்கி உயிரிழந்த
சிறுமிகளின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி
வட்டம், ஆழிமதுரை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம்
வகுப்பில் பயின்றுவந்த சிறுமி சோபியா (வயது 8) த/பெ. சசிகுமார் மற்றும் அங்கன்வாடி
மையத்தில் படித்துவந்த சிறுமி கிருஷ்மிகா (வயது 4) த/பெ.கண்ணன் ஆகிய இருவரும் இன்று
(19.02.2025) காலை பள்ளியின் எதிர்புறம் உள்ள கண்மாய்க்குச் சென்றபோது
எதிர்பாராதவிதமாக கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த
வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில், உயிரிழந்த சிறுமிகளின்
பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு
அவர்களது பெற்றோருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண
நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள்
தொடர்புத்துறை, சென்னை-