கலை பண்பாட்டுத்துறை
'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா'
சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் சென்னை
சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்கிற பிரம்மாண்ட கலைவிழா கடந்த மூன்று
ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் சென்னை
சங்கமம்- நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை சென்னையில், மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 13.1.2025 அன்று மாலை
6.00 மணியளவில் கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள
ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திடலில் தொடங்கி வைக்கப்பட்டது. மாண்புமிகு.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 260 கலைஞர்கள் பிரமாண்ட மேடையில்
வழங்கிய நிகழ்ச்சியினை முழுவதும் கண்டு களித்து, நிகழ்ச்சி நடத்திய
கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார். தொடக்கவிழா
நிகழ்ச்சியினை 4000-க்கும் ம…
பார்வையிட்டு கலை நிகழ்ச்சிகள் வழங்கிய கலைஞர்களை பாராட்டினர்.
அதுபோன்று சென்னை கீழ்ப்பாக்கம், ஏகாம்பரநாதர் திடலில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி கருணாநிதி
கலந்து கொண்டு, நிகழ்ச்சி வழங்கிய கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்
வழங்கினார். அண்ணாநகர் கோபுர பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலா,
பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்
சந்தரமோகன்,இ.ஆ.ப., கலந்து கொண்டு, கலைஞர்களை ஊக்கப்படுத்தினார்.
சென்னை இசைக்கல்லூரி வளாகத்தில் 15.01.2025 அன்று நடைபெற்ற
நிகழ்ச்சிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற றுப்பினர் திருமதி. கனிமொழி
கருணாநிதி சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு
முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தரமோகன்,இ.ஆ.ப., கலந்து கொண்டு,
கலைஞர்களை வாழ்த்தினர்.
விழா நடைபெறும் இடங்களில் பிரபல உணவகங்களின் சுவையான உணவு
வகைகள் விற்பனை செய்யும் உணவு திருவிழாவும் நடத்தப்படுகிறது. பூம்புகார்
நிறுவனத்தின் வாயிலாக விற்பனைக்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும்
வாய்ப்புகளையும் பார்வையாளர்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சங்கமம் நிகழ்ச்சியினை திரளான பொதுமக்கள் கண்டுகளிக்கும்
வகையில் செய்தி மக்கள் தொடர்புதுறையின் வாயிலாக கலை நிகழ்ச்சிகள்
நேரலையிலும், Youtube வாயிலாக இணையத்திலும் ஒளிபரப்பப்படுகிறது. 18
இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு இடங்களிலும் 1000 க்கும்
மேற்பட்டவர்கள் நேரிலும் முகநூல், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் யூ-டியூப் வாயிலாக 3
இலட்சம் மக்களும் இந்நிகழ்ச்சிகளை கண்டு களித்துள்ளனர்.