பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை
பறைசாற்றும் வகையில் "சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா" கலை
நிகழ்ச்சிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்
இன்று (13.1.2025) சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா
நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில், தமிழ் மண்ணின்
கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில்
பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின்
சார்பில் நடத்தப்படும் "சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா"-வை
தொடங்கி வைத்து, தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து
நடத்திய மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
வகையில்
தமிழ்நாட்டின் கலை பாரம்பரியத்தை பறைசாற்றும்
இவ்வரசால் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டு
வருகிறது. இந்த ஆண்டிற்கான 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா'
கலை நிகழ்ச்சிகள், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர்
கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக் கல்லூரி வளாகம்,
திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு,
ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன்
பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூர் அரசு
அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ,வெ,ரா நெடுஞ்சாலையில் உள்ள
ஏகாம்பரநாதர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி
மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா,
கே.கே.நகர் சிவன் பூங்கா,
வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம்,
கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் எஸ்.வி.
விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் 14.1.2025 முதல் 17.1.2025 நடைபெறுகிறது.