3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களுக்கு கட்டாய மாறுதல் - விவரங்களை முழுமையாக EMIS தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - Minnalkalviseithi

Latest

Friday, 18 September 2026

3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களுக்கு கட்டாய மாறுதல் - விவரங்களை முழுமையாக EMIS தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு



பார்வை (2) இல் காணும் அரசாணையில் வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் / ஒரே பணியிடத்தில் பணிபுரிந்துவரும் அலுவலகப் பணியாளர்களுக்கு கட்டாய மாறுதனும், அதனைத் தொடர்ந்து தகுதியுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் விருப்ப மாறுதல், மாவட்ட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் ஆகியவை Google Meet வழியாக நடத்தப்பட்டுவந்தது, தற்போது அனைத்து அலுவலகப் பணியாளர்களுக்கான கட்டாய மாறுதல், விருப்ப மாறுதல், மாவட்ட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் ஆகிய அனைத்தும் EMIS இணையதளம் மூலமாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து அலுவலகப் பணியாளர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் ஆய்வு செய்ததில் தற்போது பணிபுரிந்துவரும் பதவி வாரியான அலுவலகப் பணியாளர்களின் எண்ணிக்கைக்கும், EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பதவி வாரியான அலுவலக பணியாளர்களின் எண்ணிக்கைக்கும் அதிகஅளவில் (Shortfall entries) வேறுபாடுகள் உள்ளது. எனவே, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி, EMIS இணையதளத்தில் பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய பதிவுகள் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவும், 

பணியாளர் சார்ந்த பதிவுகள் EMIS இணைய தளத்தில் இல்லையெனில் புதிய உள்ளீடுகள் (Fresh Entries) பதிவுசெய்தல், ஏற்கனவே பணியாற்றிய அலுவலகத்திலிருந்து தற்போது பணிபுரியும் அலுவலகத்திற்கு பணியாளர் சார்ந்த பதிவுகளை மாற்றம் செய்யாத நிகழ்வில்  அதனை மாற்றம் செய்தல். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள உள்ளீடுகளில் சரியான திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது மிக மிக அவசியமாகிறது. இனிவரும் காலங்களில் அலுவலகப் பணியாளர்களின் மாறுதல், பதவி உயர்வு. பணிமாறுதல் கலந்தாய்வுகள் EMIS இணையதளம் வாயிலாகவே நடத்தப்படும் என்பதால் இப்பணியில் கூர்ந்து கவனம் செலுத்தி மேற்காண் பணிகளை 25.09.2026 க்குள் செய்து முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும், தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முதல் இரவுக் காவலர் வரையிலான பணியாளர்கள் எண்ணிக்கையினையினையும், EMIS இணைய தளத்தில் பதிவுகள் அடங்கிய எண்ணிக்கையும் சரியாக உள்ளதா என்பதை ஒத்திசைவு செய்து அதற்கான அறிக்கை 25.09.2026 க்குள் இவ்வியக்ககம் அனுப்பிவைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

No comments:

Post a Comment