பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 136-வது பிறந்தநாள்! - Minnalkalviseithi

Latest

Wednesday, 29 April 2026

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 136-வது பிறந்தநாள்!

தமிழ்நாடு அரசின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 136-வது பிறந்தநாள் இன்று (29.04.2026) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சார்பில், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 136-வது பிறந்த நாளான இன்று (29.04.2026), சென்னை மரினா கடற்கரை, காமராசர் சாலையில் அமைந்துள்ள பாவேந்தர் பாரதிதாசன் திருவுருவச் சிலைக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் அவர்கள் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் புகழையும் பெருமையையும் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் சென்னை மரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 136-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர், கூடுதல் இயக்குநர்கள், அரசின் உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள், பொதுமக்கள் முன்னிலையில் பாவேந்தர் பாரதிதாசன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள். -

No comments:

Post a Comment