முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்தநாளையொட்டி பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த முக்கிய பிரமுகர்களின் விவரங்கள் - Minnalkalviseithi

Latest

Tuesday, 3 March 2026

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்தநாளையொட்டி பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த முக்கிய பிரமுகர்களின் விவரங்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்தநாளையொட்டி நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும், கடிதங்கள் மூலமாகவும் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த முக்கிய பிரமுகர்களின் விவரங்கள்: 
மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தொலைப்பேசி வாயிலாகவும், எக்ஸ் வலைதளம் வாயிலாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்கள். மாண்புமிகு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் அவர்கள். மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு. எல். முருகன் ஆகியோர் எக்ஸ் வலைதளம் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மாண்புமிகு ஒன்றிய பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு அவர்கள் எக்ஸ் வலைதளம் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும். மக்களவை எதிர்கட்சித் தலைவருமான திரு. ராகுல் காந்தி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எக்ஸ் வலைதளம் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்கள். ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள். ஆகியோர் தொலைபேசி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என். ரவி அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எக்ஸ் வலைதளம் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.மாண்புமிகு பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் திரு. குலாம் சந்த் கட்டாரியா அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எக்ஸ் வலைதளம் வாயிலாக மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். 

எக்ஸ் வலைதளம் மூலமாக ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு.ஜெகன் மோகன் ரெட்டி, உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. அகிலேஷ் யாதவ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இங்கிலாந்து ஏம்ஸ்பரி நகரத்தின் மேயர் டாக்டர் மோனிகா தேவேந்திரன் அவர்கள் எக்ஸ் வலைதளம் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். கவிஞர் வைரமுத்து அவர்கள் எக்ஸ் வலைதளம் மூலமாகவும், நேரிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கமல்ஹாசன், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் எக்ஸ் வலைதளம் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 

சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்கள் எக்ஸ் வலைதளம் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு. சீமான் அவர்கள் எக்ஸ் வலைதளம் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்கள் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு, மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு நகராட்சித் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு உள்ளிட்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள். திரு. டி.ஆர்.பாலு, திருமதி கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற முதலமைச்சர் முன்னாள் உறுப்பினர்கள், திரு.ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள்: கூட்டணி கட்சித் தலைவர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் திரு. தங்கபாலு, மதிமுக பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. பெ. சண்முகம், முன்னாள் மாநில செயலாளர் திரு.ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.மு. வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலாளர் திரு. இரா. முத்தரசன், துணை செயலாளர்கள் திரு. ரவி. திரு.பெரியசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பாபு, திரு. எஸ்.எஸ்.பாலாஜி, துணைப்பொதுச் செயலாளர் திரு.வன்னியரசு, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் திரு. எம்.எச். ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல்சமது, மாநில அமைப்புச் செயலாளர் திரு. ஷேக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஈ.ஆர். ஈஸ்வரன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் திரு. தனியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன். தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொருளாளர் திரு. எல்.கே. சுதீஷ், துணை பொதுச் செயலாளர்கள் திரு. சந்திரன் மற்றும் திரு. பன்னீர்செல்வம்; திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் திரு. சுப. வீரபாண்டியன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் திரு. இனிகோ இருதயராஜ், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் திரு. தமீமுன் அன்சாரி. முக்குலத்தோர் புலிப்படை தலைவர் திரு. கருணாஸ், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் திரு. அதியமான், ஆதித்தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் திரு.கு. ஜக்கையன், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் திரு. வசீகரன். தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திரு. திருப்பூர் அல்தாப், இந்திய தேசிய லீக் தலைவர் திரு. பஷீர் அகமது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் திரு. ஏ.எம். விக்கிரமராஜா, ஈரோடு புதிய திராவிடர் கழகத் தலைவர் திரு. கே.எஸ்.ராஜ்குமார், வீர முத்தரையர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.கே.கே. செல்வக்குமார், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. எஸ். பீட்டர் அல்போன்ஸ், Social Democratic Party of India (SDPI) கட்சியின் மாநிலத் தலைவர் திரு. நெல்லை முபாரக், மாநில பொதுச் செயலாளர்கள் திரு.ஏ.கே.கரீம், திரு.அபுபக்கர் சித்திக், தலைமை நிலைய செயலாளர் திரு. முகமது ரஷீத். சென்னை மேற்கு மாவட்ட தலைவர் திரு.செய்யது அகமது, சேப்பாக்கம் தொகுதி தலைவர் திரு.ஜெய்னுலாப்தீன் மற்றும் நிருவாகிகள், திராவிட வெற்றிக் கழகத் தலைவர் திரு. மல்லை சத்யா, தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியின் தலைவர் திரு. ஜி.கே.வாசன் அவர்கள் கடிதம் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் திரு. வாகை சந்திரசேகர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. எஸ்.வி.சேகர். திருமதி திவ்யா சத்யராஜ்: இந்து குழுமத்தின் இயக்குநர் திரு. என். ராம். திரைப்பட இயக்குநர் திரு. மாரி செல்வராஜ்: தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம். இ.ஆ.ப. கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) திரு.ஜி.வெங்கடராமன், இ.கா.ப. உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்கள், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள்: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் திரு. வி. நாராயணசாமி: டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் திரு. வேணு சீனிவாசன், திரு. நல்லி குப்புசாமி, விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர்வி.ஜி.சந்தோசம், அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் (AIRF) தலைவரும். தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளருமான திரு. என். கண்ணையா, டாக்டர் மோகன் காமேஸ்வரன். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் திரு. ஜோ. அருண்: முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, இ.ஆ.ப., (ஓய்வு). காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் திரு. சைலேந்திர பாபு, இ.கா.ப., (ஓய்வு): தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. ஆர். தங்கம் மற்றும் சங்க நிர்வாகிள், தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும். 

டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவருமான பேராசிரியர் திரு. தீபக் நாதன்: பேரறிஞர் இன்று (1.3.2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தந்தை பெரியார் நினைவிடங்களுக்கும், கோபாலபுரம் இல்லம் மற்றும் சிஐடி காலனி இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கும் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் காலை 9.15 மணி முதல் முக்கியப் பிரமுகர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் 4 என பல்லாயிரக்கணக்கானோர்களிடமிருந்து சுமார் மணிநேரம் நேரம் நின்றவாறே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்தினை பெற்றார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment