தமிழ்நாடு வக்பு வாரியம் செய்தி வெளியீடு - Minnalkalviseithi

Latest

Sunday, 21 December 2025

தமிழ்நாடு வக்பு வாரியம் செய்தி வெளியீடு

தமிழ்நாடு வக்பு வாரியம் வக்பு நிறுவனங்கள் மற்றும் அதன் சொத்துக்களின் விபரங்களை உமீத் (UMEED) தரவுத்தளத்தில் பதிவேற்றப்பட வேண்டியது உமீத் சட்டம் 1995 இன்படி கட்டாயமாகும். 
இதற்கான இறுதி நாள் கடந்த 06.12.2025 அன்றுடன் நிறைவடைந்த நிலையில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பாக உமீத் (UMEED) தரவுத்தளத்தில் பதிவேற்ற கால அவகாசம் கோரி மாண்பமை தமிழ்நாடு வக்பு தீர்ப்பாயத்தில் 0.A.No.158/2025 வழக்கு தொடரப்பட்டதில் 11.12.2025 உத்தரவில் பதிவேற்றம் செய்திட 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வக்பு மற்றும் அதன் சொத்துக்களின் விவரங்களை உமீத் (UMEED) தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்திட தமிழநாட்டிற்கு மீண்டும் அனுமதிக்கப்பட்டு கடைசி நாள்.06.06.2026 எனத் தெரவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, வக்பு நிறுவனங்கள் மற்றும் அதன் சொத்துக்களை பாதுகாத்து பராமரித்திட தாமதமின்றி உமீத் (UMEED) தரவுத்தளத்தில் ஒரு மாத காலத்திற்குள் பதிவேற்றம் செய்திட வக்பு நிறுவனங்களின் முத்தவல்லி/நிர்வாகக்குழுவினர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்படி உத்தரவினை செயல்படுத்த தவறும்/மறுக்கும் முத்தவல்லி/நிர்வாகக்குழுவினர் மீது உமீத் சட்டம் 1995 பிரிவு 61(b)(1A)(V)-இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment