தமிழ்நாடு வனத்துறை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, "மனித-வன உயிரின சக வாழ்வு" எனும் தலைப்பில் 02.10.2025 முதல் 08.10.2025 வரை வன உயிரின விழா 2025-ஐ வெற்றிகரமாகக் கொண்டாடியது. இவ்விழாவின் முக்கிய நோக்கம் வனஉயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வளர்த்தல், சமூக பங்கேற்பை ஊக்குவித்தல் மற்றும் உயிர்ப் பன்மை பாதுகாப்பில் மாநிலத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை வெளிப்படுத்துவதாகும்.
விழாக்களின் ஒரு பகுதியாக. வனஉயிரினங்கள் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நலனிற்காக தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானை முகாமில் இந்தியாவின் இரண்டாவது தனித்துவமான மாவுற்களுக்கான (Mahouts) கிராமத்தை திறந்து வைத்து விழாவைத் தொடக்கிவைத்தார். இது யானைகள் மற்றும் அவற்றைப் பராமரிக்கும் பாதுகாவலர்களின் நலனில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அதே முகாமில் தொடங்கப்பட்ட புதிய கட்டமைப்பு வசதிகளின் தொடக்க விழா மாநிலத்தின் வனஉயிரின மேலாண்மை முயற்சிகளை மேலும் வலுப்படுத்துகின்றன. மேலும், காவடிகளை (Caves) நேரடி நியமணம் செய்வதற்காக நளடமுறையில் உள்ள பணி விதிகளை மாநில அரசு திருத்தம் செய்துள்ளது மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பு நடவடிக்கையாகும். இது பாரம்பரிய நடைமுறைகளை பாதுகாத்து, அதனை யானைகளுக்கான நவீன மேலாண்மை நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்கிறது.
மாண்புமிகு வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு R.S. ராஜகண்ணப்பன் மூன்றாவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையினை (2025)
வெளியிட்டார்.
இந்த அறிக்கை. தமிழக அரசு மேற்கொண்டு வரும் அறிவியல் அடிப்படையிலான நீண்ட கால யானை பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக் கொள்கைகளை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் தற்போது 3.170 காட்டு யானைகள் உள்ளதாகவும், இது கடந்த மதிப்பீட்டில் இருந்த 3.063 யானைகளைவிட 107 அதிகம் எனவும் அவர் அறிவித்தார். இது மாநில அரசால் மேற்கொண்ட வனஉயிரினங்களின் வாழ்விட பாதுகாப்பு, மனித-வன உயிரின மோதல்களை தடுத்தல் மற்றும் உயிரினங்களை கண்காணித்தல் போன்ற முயற்சிகளின் விளைவாகும்.
நீலகிரி வரையாடு தினத்தையொட்டி மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே
வாழும் நீலகிரி வரையாடுகளின் பாதுகாப்பு மற்றும் அதன் இயற்கை வாழிடங்களைப் புணரமைக்கும் முயற்சியை பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாகு, இ.ஆ.ப. நீலகிரி வரையாடு அஞ்சல் அட்டையினை வெளியிட்டார். மேலும், உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனம், வண்டலூரில் நடைபெற்ற மனித-வனஉயிரின மோதல் மேலாண்மை குறித்த வனச்சரக அலுவலர்களின் மாநாடு. வனச்சரக
அலுவலர்கள் களப்பணிகளிலுள்ள தங்கள் அனுபவங்களையும் செயல்திறன் கொண்ட உத்திகளையும் பகிரும் ஒரு மேடையாக இருந்தது. விழாவின் போது. திரு. ராகேஷ் குமார் டோக்ரா. இ.வய.. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர். பல்வேறு பொது விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றதாகவும். அவற்றில் குறிப்பிடத்தக்க வகையில் ஐந்து புலிகள் காப்பகங்களிலும் நெகிழி இல்லா புலிகள் காப்பகங்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டதாகவும். இதில், கழிவுகள் அகற்றப்பட்டதுடன், மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்க முயற்சி செய்யப்பட்டதாகவும், மேலும் பல்வேறு பேரணிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றதாகவும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பரளியார் மற்றும் செம்புகரை-பெருமாள்முடி பாதை வழியாக நடைபெற்ற வனஉயிரின விழிப்புணர்வு நடைபயணங்கள் பொதுமக்களை ஈடுபடுத்தி சுற்றுச்சூழலின்மீது அவர்களின் பொறுப்பு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் அமைந்ததாகவும் தெரிவித்தார்.
இவ்வாண்டு விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, தமிழ்நாடு வனத்துறை மூலம் மாநில அளவிலான வனஉயிரினங்கள் தொடர்பான வினாடி வினா போட்டி இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்பட்ட இப்போட்டியின் ஆரம்ப சுற்று, இணையத்தின் வழியாக 30.09.2025 அன்று நடைபெற்றது. இதில், மாநிலத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 72,298 பள்ளி மாணவர்கள் பங்கேற்றது. நாட்டின் மிகப்பெரிய வனஉயிரினங்கள் சார்ந்து மாணவர்களை ஒருங்கிணைத்த நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது.
இப்போட்டியின் இறுதிச்சுற்று 08.10.2025 அன்று சென்னை கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா அரங்கத்தில் வனஉயிரின வார விழாவின் நிறைவு விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்றது. மாநிலத்தின் ஆறு மண்டலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இறுதிச்சுற்றில் போட்டியாளர்கள் பங்கேற்று, வனஉயிரினங்கள் மற்றும் இயற்கை குறித்து தங்களுடைய மிகுந்த ஆர்வத்தையும் அறிவையும் வெளிப்படுத்தினர்.
நிறைவு விழா மாநில அளவிலான வினாடி வினா இறுதிப்போட்டியுடன் தொடங்கியது. அதன் பின்னர், வனஉயிரின புகைப்பட போட்டி மற்றும் வினாடி வினா போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய வனத்துறை அதிகாரிகளான திரு ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி. இவய, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்), திரு. ராகேஷ் குமார் டோக்ரா, இவய. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர். திரு. ஹ.வேணுபிரசாத் இ.வய, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வன உயிரினம்), திரு. தின்கர் குமார். இவய, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனப்பாதுகாப்பு சட்டம்), திரு. ரிட்டோ சிரியாக், இவய. தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, திரு. மனீஷ் மீனா, இ.வ.ய.. வன உயிரினக் காப்பாளர், சென்னை மற்றும் அனைத்து வனத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் வன உயிரினப் பாதுகாப்பு முயற்சிகளின் அவசியத்தையும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் இளைஞர்களின் பங்குபெறுதலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
