சென்னை இதழியியல் கல்வி நிறுனத்தின் மாணவர் சேர்க்கை 10.08.2025 வரை கால நீட்டிப்பு

0 MINNALKALVISEITHI

இதழியல் துறையில் முதுநிலை பட்டயப் படிப்பை வழங்கும் சென்னை இதழியியல் கல்வி நிறுனத்தின் மாணவர் சேர்க்கைக்கான கால நீட்டிப்பு. நடப்பு கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கை 10.08.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது |

சென்னை இதழியியல் கல்வி நிறுனத்தின் மாணவர் சேர்க்கை 10.08.2025 வரை கால நீட்டிப்பு

24.07.2025 அன்று துவங்கிய சென்னை இதழியல் கல்வி நிறுவனம் அளிக்கும் ஒரு வருட இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பின் மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் 03.08.2025 அன்று முடிவடைய உள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 10.08.2025 வரையில் நீடிக்கப்படுகிறது.

தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் செயல்படுவதற்கான உயர்தர கல்வியை வழங்கும் வண்ணம் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரத்தை அறியவும், முதுநிலைப் பட்டயப் படிப்பிற்காக விண்ணப்பிக்கவும் https://cij.tn.gov.in// என்ற இணைய தளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்களும், ஆண்களும் பொறுப்புடன் கூடிய சிறந்த ஊடகவியலாளராக செயல்பட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முன்னெடுப்பில் அனைவரும் பங்கு பெறும் விதத்தில், இந்த முதுநிலை பட்டயப் படிப்பின் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 10.08.2025 ஆகும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.