உலகப் புலிகள் தினம் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

0 MINNALKALVISEITHI

உலகப் புலிகள் நாளையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

உலகப் புலிகள் நாளில் தமிழ்நாடு பெருமிதத்துடன் முழங்குகிறது!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத் தரவுகளின்படி, 306 புலிகளைக் கொண்டுள்ளது தமிழ்நாடு. இந்த வெற்றிக்குக் காரணம், கடினமான பகுதிகளில், முக்கியத்துவம் மிகுந்த புலிகளின் வாழிடங்களைப் பாதுகாக்கும் நமது வனத்துறைப் பணியாளர்களும், வேட்டைத் தடுப்பு அணியினரும்தான்.

வனங்களைப் பாதுகாக்கும் பணியினை மேம்படுத்திட, 1,947 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. வனத்துறையினருக்கு நவீன உடைகள். தொழில்நுட்பக் கருவிகள் வழங்கப்படுகின்றன. கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அயல் ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றி, புலிகளின் வாழிடங்கள் மீளுருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. காடுகளின் வளம் மேம்படுத்தப்படுகிறது. கானுயிர் மீதான குற்றங்கள் புரியும் கும்பல்களை அடக்க, தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு (TNWFCCB) எனும் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

புலிகளைப் பாதுகாப்பதன் வழியே. நம் காடுகளின் ஆன்மாவை நாம் பாதுகாக்கிறோம்.

On International Tiger Day, Tamil Nadu roars with pride.

With 306 tigers as per NTCA, this success rests on the shoulders of our forest staff and anti-poaching teams who guard critical habitats across tough terrains.

To boost forest conservation, 1947 field posts have been filled, forces are being upgraded with modern gear, technology, and dedicated veterinarians.

Habitats are being revived by removing invasives and improving forest health. The Tamil Nadu Forest and Wildlife Crime Control Bureau (TNWFCCB), a specialised unit, has been formed to curb organised wildlife crime.

In saving our tigers, we are protecting the soul of our forests.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.