2021-ஜூலை 29 அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி 27% இட ஒதுக்கீடு வென்று காட்டிய சமூகநீதி நன்னாள்

0 MINNALKALVISEITHI

2021-ஜூலை 29 அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி 27% இட ஒதுக்கீடு வென்று காட்டிய சமூகநீதி நன்னாள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான திரு. பி. வில்சன் அவர்களின் பதிவை மேற்கோள்காட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

20,088 இடங்கள் =பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு!

சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்!

சமூகநீதிக்கான இந்த அரசியலையும் போராட்டத்தையும் நாம் -மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம்|

நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான திரு. பி. வில்சன் அவர்களின் வலைதளப் பதிவு

சமூகநீதி வரலாற்றின் சாதனை மைல்கல்!

2021 ஜூலை 29 அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி 27% இட ஒதுக்கீடு வென்று காட்டிய சமூகநீதி நன்னாள்!

சமத்துவ நாயகர், சமூகநீதிக் காவலர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் காட்டிய வழியில், OBC மாணவர் நலனில் கொண்ட உறுதியில் சட்டப் போராட்டத்தில் வென்று காட்டினோம்!

இந்திய அளவில் நிலைநாட்டப்பட்ட OBC மருத்துவ மாணவர்களின் கல்வி உரிமை !

14 வருடங்களாக மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.