திருமணமான அரசு பெண் பணியாளர்கள் அவர்களது தகுதிகாண் பருவ காலத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளுதல் - ஆணை

0 MINNALKALVISEITHI

பொதுப் பணிகள் 2025-2026-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது 28.04.2025 அன்று சட்டமன்றப் பேரவை விதிகளில், விதி எண் 110-இன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - திருமணமான அரசு பெண் பணியாளர்கள் அவர்களது தகுதிகாண் பருவ காலத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளுதல் - ஆணை வெளியிடப்படுகிறது. 

மனித வள மேலாண்மை (எஸ்) துறை அரசாணை (நிலை) எண்.21. 예: 28.05.2025 விசுவாவசு, வைகாசி-14, திருவள்ளுவர் ஆண்டு-2056. 

ஆணை 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 28.04.2025 அன்று நடைபெற்ற 2025-2026-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாதகாலமாக இருந்த விடுப்பு 0107.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது என்றும், ஆனால், தற்போதுள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்புக் காலம் தகுதிகாண் பருவத்திற்கு (Probation period) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்றும், இதன் காரணமாக அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் பல்லாயிரக்கணக்கான இளம்மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது என்றும், மகளிர் முன்னேற்றத்திற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் இந்த அரசு, அரசுப் பணிகளில் பணியாற்றி வரும் மகளிரின் பணி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பு காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்றும் சட்டமன்றப் பேரவை விதிகளில் விதி 110 இன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்குறிப்பிட்ட அறிவிப்பிற்கிணங்க. பின்வருமாறு ஆணைகள் வெளியிடப்படுகின்றன. (i) திருமணமான அரசு பெண் பணியாளர்கள் தகுதிகாண் பருவ காலத்தின் போது துய்க்கும் மகப்பேறு விடுப்புக் காலம் அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். த.பி.பா. (ii) சிறப்பு / தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகாண் பருவ பணிக்காலம் (duty period) 28.04.2025 அன்று முடிவுறாதவர்களுக்கு இச்சலுகை பொருந்தும். (iii) சிறப்பு தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகாண் பருவ பணிக்காலம் (duty period) 28.04.2025-க்கு முன்பு முடிவுற்றவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது. (iv) இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம். 2016-ற்கு உரிய திருத்தங்கள் பின்னர் வெளியிடப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.