சமூகநீதி நாயகர் திரு. பி.பி.மண்டல் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்

0 MINNALKALVISEITHI

சமூகநீதி நாயகர் திரு. பி.பி.மண்டல் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்

அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைப்புரீதியாக வாய்ப்பு மறுக்கப்படுவதை தனது ஆணையத்தின் மூலம் அம்பலப்படுத்தி, சமூகநீதியை உயர்த்திப்பிடித்த நாயகர் திரு. B.P.மண்டல் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு எம் புகழ் வணக்கம்!

மண்டல் அவர்கள் கொண்ட பார்வையை இந்த தேசம் உணரும் முன்பே நன்குணர்ந்து அவரது நோக்கத்துக்குத் துணையாக உறுதியாக நின்றது திராவிட இயக்கம். அவர் முன்னெடுத்த போராட்டம் இன்னும் நிறைவுறவில்லை. துணிவும் நியாயமும் மிக்க அவரது பல பரிந்துரைகள் இன்னும் நிறைவேற்றப்படமாலே இருக்கின்றன. சமூகநீதிக்கான பயணத்தில் பல தடைகளும் புதிய வடிவங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.

திரு. மண்டல் அவர்களைப் போற்றுவதென்பது அவரது கனவை முழுமையாக நிறைவேற்றுவதே அன்றி, அதனை நீர்த்துப்போகச் செய்வது அல்ல. அவர் கனவை நிறைவேற்றும் போராட்டத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்!

On his death anniversary, we pay tribute to Thiru. B.P.Mandala torchbearer of social justice whose Commission exposed the structural denial of opportunity to OBCS.

The Dravidian movement stood firmly with his vision, even before the nation recognised it. The battle he championed is far from over. Many of his bold and fair recommendations still gather dust, and the pursuit of social justice continues to face resistance in new forms.

Honouring B.P.Mandal means implementing his full vision, not diluting it. We remain committed to that fight.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.