தேசிய கல்விக் கொள்கை / மும்மொழிக் கொள்கை - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

0 MINNALKALVISEITHI
தேசிய கல்விக் கொள்கையையும், அதன்வழி மும்மொழிக் கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய ரூ.2,152 கோடி நிதியை பறித்து, பிற மாநிலங்களுக்கு அளித்தது குறித்து - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு 

தேசிய கல்விக் கொள்கையையும், அதன்வழி மும்மொழிக் கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய 2,152 கோடி ரூபாயைப் பறித்து, தற்போது வேறு மாநிலங்களுக்கு அளித்துள்ளனர். தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களைத் தண்டிக்கும் நோக்கில் இத்தகைய வலுக்கட்டாயமான செயலைச் செய்கின்றனர். இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசும் ஒரு மாநிலத்தை அரசியல்ரீதியாகப் பழிவாங்குவதற்காக மாணவர்களின் கல்விக்குத் தடை ஏற்படுத்தும் அளவுக்குக் இரக்கமில்லாமல் நடந்துகொண்டதில்லை. 

தமிழ்நாட்டு, தமிழ் மக்கள் மீதான வெறுப்பு மற்றும் நமக்கு இழைக்கப்படும் அநீதியின் முழு உருவம் பா.ஜ.க. என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. The Union BJP Government's unjust attitude against Tamil Nadu knows no bounds! For rejecting the imposition of NEP2020 and the three-language policy, they resorted to open blackmail, snatching away Rs.2,152 crore meant for Tamil Nadu's students and now they have handed it over to other states. This is nothing short of coercion, punishing our students for standing up for their rights. No government in India's history has been so ruthless to strangle access to education for political revenge against a State. The BJP has once again proven itself to be the face of injustice and hatred towards Tamil Nadu and its people!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.