பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர். ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மற்றும் நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

0 MINNALKALVISEITHI
மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர். ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மற்றும் நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
இன்று (2.2.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (Jamboree) மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிறைவு விழாவிற்கு கலந்துகொள்ள திருச்சி விமான நிலையம் வந்தடைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சுற்றுலா மாளிகை செல்லும் வழியில், திருச்சிராப்பள்ளி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மற்றும் நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகியோரின் மணிமண்டபங்களுக்கு சென்று அவர்களது திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, மணிமண்டபங்களை ஆய்வு மேற்கொண்டார்.

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற கடந்த மூன்றரை ஆண்டுகளில், நாட்டிற்காகவும். தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்ட பெருமக்களின் தியாகங்களைப் போற்றி அவர்களுடைய சிலைகளையும் மணிமண்டபங்களையும், அரங்கங்களையும் அமைத்து வருங்கால இளைஞர்கள் அறிந்து உணர்ந்து பின்பற்றும் வண்ணம் 10-க்கும் மேற்பட்ட நினைவரங்கங்களையும் திருவுருவச் சிலைகளையும் திறந்து வைத்துள்ளார்கள். 

மேலும் 37 பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்குமான நினைவுச் சின்னங்களையும் அமைத்து வருகிறார்கள். இவை இந்தியாவிற்கே வழிகாட்டத் தக்கவையாகும். அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள், மணிமண்டபங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றதா என்பதை ஆய்வு மேற்கொள்ளும்பொருட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் (2.2.2025) திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரரசர்2 பெரும்பிடுகு முத்தரையர். 

ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மற்றும் நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகியோரின் மணிமண்டபங்களை ஆய்வு மேற்கொண்டார். இம்மணிமண்டபங்கள் மொத்தம் 4.03 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 27.2.2024-அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. ஆய்வுக்குப் பின்னர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மணிமண்டபங்களின் உட்புறப் பகுதிகளில் இம்மூவரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படங்களை அமைத்திடவும், மண்டபங்களின் வெளிப்புறங்களில் உள்ள புதர்களை அகற்றி, பூச்செடிகளை வைத்து தூய்மையாக பராமரித்திடவும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

 இந்த நிகழ்வின்போது. மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.பழனியாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார். இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.