வாங்குவோர் விற்பனை செய்வோர் சந்திப்பு - கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்

0 MINNALKALVISEITHI
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் இரகங்களின் விற்பனையினை அதிகரிக்க ஏதுவாக வாங்குவோர் விற்பனை செய்வோர் சந்திப்பு 21.02.2025 அன்று விஜயவாடா, லெமன் ட்ரீ ஹோட்டலில் நடைபெற்றது 

2023-2024ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர். 06.09.2023 அன்று நடைபெற்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களால் "கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி இரகங்களின் விற்பனையினை அதிகரிக்க எதுவாக 4 மெட்ரோ நகரங்களில் ரூபாய் 50.00 இலட்சம் செலவில் வாங்குவோர்-விற்பனை செய்வோர் சந்திப்பு நடத்தப்படும்" என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி, முதலாவது வாங்குவோர்-விற்பவர் சந்திப்பு 09.02.2024 அன்று சென்னை. ஹயாத் ரெஜன்சி ஹோட்டலிலும், இரண்டாவது வாங்குபவர்-விற்பவர் சந்திப்பு, 2024 பிப்ரவரி 26 முதல் 29 வரை புது டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பாரத் டெக்ஸ் நிகழ்வின் போதும், மூன்றாவது வாங்குபவர்-விற்பவர் சந்திப்பு செப்டம்பர் 23, 2024 அன்று பெங்களூரு. பசவனகுடி, பாய் விஸ்டா மண்டபத்திலும் நடத்தப்பட்டது. 

இச்சந்திப்புகளில் சென்னை மற்றும் பெங்களூரு தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட 1000 புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி இரகங்களும், தேசிய வடிவமைப்பு நிறுவனம். அகமதாபாத் மூலம் பயிற்சி பெற்ற வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட கைத்தறி இரகங்களும், புவிசார் குறியீடு பெற்ற செடிபுட்டா, நெகமம் மற்றும் சுங்குடி சேலைகளும் காட்சிப்படுத்தப்பட்டது.முதலாவது வாங்குவோர்-விற்பவர் சந்திப்பில் ரூபாய் 41.00 கோடி, இரண்டாவது வாங்குபவர்-விற்பவர் சந்திப்பில் ரூபாய் 20 கோடி மற்றும் மூன்றாவது வாங்குபவர்-விற்பவர் சந்திப்பில் ரூபாய் 12 கோடி மதிப்பிலான கைத்தறி இரகங்களை கொள்முதல் செய்ய கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஜவுளி வியாபாரிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 

நான்காவது வாங்குபவர்-விற்பவர் சந்திப்பு பிப்ரவரி 21, 2025 அன்று ஆந்திர மாநிலம், விஜயவாடா, லெமன் ட்ரீ ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவினை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இச்சந்திப்பில் சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள National Institute of Fashion Technology மூலம் உருவாக்கப்பட்ட 1,000 புதிய வடிவமைப்புகள் மற்றும் அகமதாபாத்தில் உள்ள National Institute of Design மூலம் பயிற்சி பெற்ற வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட கைத்தறி இரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள். திருப்புவனம் பட்டுப் புடவைகள், ஆரணி பட்டுப் புடவைகள், மென்மையான பட்டு வகைகள், சேலம் வெள்ளை பட்டு வேட்டிகள். 

கோயம்புத்தூர் காட்டன் புடவைகள் வீட்டுக் கைத்தறி ஜவுளிப்பொருட்கள் மற்றும் செட்டிநாடு, நெகமம் மற்றும் சுங்குடி சேலைகள் போன்ற புவியியல் குறியீடுகள் உட்பட தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கைத்தறி ஜவுளி ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இச்சந்திப்பின்போது, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள ஜவுளி வணிகர்கள் மற்றும் கைத்தறி ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டு அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்ட மதிப்பு மிக்க கைத்தறி இரகங்களை பார்வையிட்டு ரூபாய் 9 கோடி மதிப்பிற்கு மேல் கைத்தறி இரகங்களை கைத்தறி நெசவாளர் கூட்டுறவுசங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 

தமிழ்நாடு கைத்தறித்துறையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், ஆந்திர மாநிலம் சார்பில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர். பொருளதாரத்தில் பின்தங்கியோர் நலன் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திருமதி எஸ். சவிதா, கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் திருமதி. ரேகா ராணி, இ.ஆ.ப., நிர்வாக இயக்குநர், ஆந்திரப் பிரதேச மாநில கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் திரு.பாவண மூர்த்தி, இ.வ.ப., மற்றும் பொது மேலாளர் (நிர்வாகம்), ஜார்கிராப்ட், ஜார்க்கண்ட், திரு. பங்கஜ் குமார் ஷா ஆகியோரும் தமிழ்நாடு கைத்தறி துறை இயக்குநர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப.. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., மற்றும் கைத்தறி துறையின் கூடுதல் இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.