அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்கள். தலைசிறந்த பாட வல்லுநர்களைக் கொண்டு வருகின்ற 26.02.2025, 27.02.2025 மற்றும் 28.02.2025 ஆகிய 3 நாட்கள் மாதிரி ஆளுமைத் தேர்வு

0 MINNALKALVISEITHI
தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 
அண்மையில், அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தில் 2024 டிசம்பர் மாதம் நடைபெற்ற மாதிரி ஆளுமைத் தேர்வில் 69 பேர் கலந்து கொண்டனர். பின்னர். இப்பயிற்சி மையத்தில் சிறப்பு அனுமதி பெற்று இந்திய வனப்பணி முதன்மைத் தேர்விற்கு தங்கி பயின்ற 39 ஆர்வலர்களில் 3 மகளிர் உள்பட 8 ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் தற்போது, வனப்பணி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கும், முதற்கட்ட மாதிரி ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கும் இப்பயிற்சி மையத்தின் மூலம் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்கள். தலைசிறந்த பாட வல்லுநர்களைக் கொண்டு வருகின்ற 26.02.2025, 27.02.2025 மற்றும் 28.02.2025 ஆகிய 3 நாட்கள் மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 

இது, தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்கள், தங்களது ஆளுமைத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும். அகில இந்திய வனப்பணி / குடிமைப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த தேர்வர்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட மாதிரி ஆளுமைத் தேர்வை தவறவிட்டவர்கள் இம்மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர். இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு பங்கு பெற விரும்பும் தேர்வர்கள்.தங்களது விருப்பத்தினை www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் 22.02.2025 முதல் பதிவு செய்து கொள்ளலாம். DAF-I & DAF-II விவரங்களை பதிவு செய்து அவற்றை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு கட்டாயம் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

இம்மையத்தில் மாதிரி ஆளுமைத்தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு, டெல்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வுக்குச் சென்றுவர பயணச் செலவுத் தொகையாக ரூ.5.000/- வழங்கப்படும். இம்மையத்தில் முதன்மை தேர்வு பயிற்சி பெற்ற ஆர்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், தகவல்களை அறிந்து கொள்ள alcscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9345766957 என்ற புலன் எண்ணிற்கோ (வாட்ஸ்-அப்) அல்லது 044-24621475 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம். மேலும், 24.02.2025, 5.00 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Tags
UGC

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.