துணைத் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாநில திட்டக் குழுவின் ஆய்வு கூட்டம்

0 MINNALKALVISEITHI
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்/மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாநில திட்டக் குழுவின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்/மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (24.2.2025) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில திட்டக் குழு அலுவலகத்தில், மாநில திட்டக் குழுவின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

இவ்வாய்வு கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்/மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவர் அவர்கள் மாநில திட்டக் குழுவால் இதுவரை தயாரிக்கப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அரசின் முன்னோடி திட்டங்களுக்கான மதிப்பீட்டு ஆய்வுகள். சிறப்பு ஆய்வுகள் குறித்தும், தற்சமயம் நடைபெற்று வரும் ஆய்வுகள் குறித்தும், மாநில திட்ட குழுவால் நடைமுறைப்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் குறித்தும் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் அரசின் முன்னோடி மக்கள் நலத்திட்டங்களின் பயன்கள் மற்றும் அதனால் பொது மக்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டங்களால், தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் உள்ள சாமானிய மக்கள் முதல் நகரத்தில் வாழும் மக்கள் வரை எந்த அளவில் பயன் பெற்றுள்ளார்கள், இந்த திட்டங்கள் அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றங்கள். மாற்றங்கள் குறித்து திட்டக்குழு மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த புள்ளி விவரங்களை விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். 

திட்டங்கள் மக்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள்குறித்து விரிவாகவும், ஆழமாகவும் ஆய்வு மேற்கொண்டதற்காக திட்டக்குழுவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன், கூடுதல் தலைமைச் செயலாளர்/துணை முதலமைச்சர் அவர்களின் செயலாளர் திரு.பிரதீப் யாதவ், இ.ஆ.ப., நிதித் துறை முதன்மைச் செயலாளர் திரு.த.உதயச்சந்திரன், இ.ஆ.ப., மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் செயலர் திருமதி எஸ்.சுதா. இ.வ.ப., மாநில திட்டக் குழுவின் முழு நேர உறுப்பினர் பேரா.இராம.சீனுவாசன், கூடுதல் முழு நேர உறுப்பினர். 

பேரா.ம.விஜயபாஸ்கர், பகுதி நேர உறுப்பினர்கள் சட்ட மன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், திரு.கே.தீனபந்து, இ.ஆ.ப., (ஓய்வு), திருமதி மல்லிகா ஸ்ரீனிவாசன், பத்மஸ்ரீ நர்த்தகி நட்ராஜ், பேரா.சுல்தான் அஹமத் இஸ்மாயில், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், மருத்துவர் கு.சிவராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.