'பொங்கல் - உழவும் மரபும்' பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள்

0 MINNALKALVISEITHI
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 'பொங்கல் - உழவும் மரபும்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல்வேறு வகையான போட்டிகளில் வெற்றி பெற்ற 36 நபர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள் அய்யன் திருவள்ளுவர்."சுழன்று ஏர்ப் பின்னது உலகம்" என்கிறார். 

அதாவது, உலகம் பல தொழில் செய்து துன்புற்றாலும் இறுதியில் உழவுத் தொழிலே சிறந்தது என்பது அவரது திடமான கருத்து. விவசாயம் செழித்தால் மட்டுமே மனிதர் வாழ்வு மேன்மையுறும். நமது மரபையும் வாழ்வியலையும் பறைசாற்றும் பொங்கல் திருவிழா நீண்ட நெடுங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 விவசாயம், இயற்கை, கதிரவன், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், மரபையும் உழவுத்தொழிலையும் கொண்டாடும் வகையிலும் பொங்கல் விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். நமது நீண்ட மரபையும், விவசாயம், கால்நடைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது நமது கடமையாக உள்ளது.

 பொங்கல் என்பது வெறும் விழா மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டின் அடையாளம் என்பதை மாணவர்கள், இளைஞர்கள் புரிந்து தெளிவு பெறுவதற்கு பொங்கல் விழா உதாரணமாக உள்ளது. நமது பண்பாட்டு விழுமியங்களான, வீரம், கொடை, உழைப்பு ஆகியவற்றை உணர்த்தும் இந்தப் பொங்கல் திருநாளுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில் கோலப் போட்டி. ஓவியப் போட்டி, புகைப்படப் போட்டி, ரீல்ஸ் போட்டி, பாரம்பரிய உடைப் போட்டி, மண்பானை அலங்கரித்தல் போட்டி, சுயமிப் போட்டி ஆகிய கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன. 

போட்டியாளர்களிடமிருந்து ஓட்டுமொத்தமாக 6154 படைப்புகள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டன. அதில் கோலப் போட்டிக்கு 1682 நபர்களும், ஓவியப் போட்டிக்கு 1276 நபர்களும் புகைப்படப் போட்டிக்கு 864 நபர்களும், ரீல்ஸ் போட்டிக்கு, 518 நபர்களும், பாரம்பரிய உடை புகைப்படப் போட்டிக்கு 494 நபர்களும், மண் பானை அலங்கரித்தல் போட்டிக்கு 490 நபர்களும். சுயமிப் போட்டிக்கு 830 நபர்களும் தங்களது படைப்புகளை அனுப்பியிருந்தார்கள். அதில் சிறந்த படைப்புகளை அளித்த 36 நபர்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள், இன்று (10-02-2025) சென்னை கலைவாணர் அரங்கில், செய்தி மக்கள் தொடர்புத்துறை ஊடக மையம் சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு 'பொங்கல் உழவும் மரபும்' என்ற தலைப்பில் பல்வேறு வகையான போட்டிகளில் வெற்றி பெற்ற 36 நபர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினார்கள். 

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு. வே.ராஜராம்.இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு. இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் (செய்தி) திரு. எஸ்.செல்வராஜ் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை உயர் அலுவலர்கள், ஊடக GOLDILI அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.