பள்ளிக் கல்வி நடுநிலை /மறுநியமனம் அரசு / அரசு நிதி உதவி
பெறும் தொடக்க /உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உபரி
ஆசிரியர்கள் - கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது -
ஆசிரியர்களுக்குக் கல்வியாண்டு இறுதிவரை மறுநியமனம் அளிப்பது வழிகாட்டு நெறிமுறைகள்
அடங்கிய ஆணை வெளியிடப்படுகிறது.
ஆணை:-
கல்வியாண்டின் இடையில் ஒய்வு பெறும் வயது அடையும் ஆசிரியர்களை
பணி ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படின், கல்வியாண்டு முடியும் வரை அப்பணியிடம்
பூர்த்தி செய்யப்படாத நிலையில், பாடம் போதிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலையினைத்
தவிர்க்கவும், மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலையினைத்
தவிர்க்கவும், கற்பித்தல் பணி பாதிக்கக் கூடாது என்பதைக் கருதியும்,
ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் இறுதிவரை மறுநியமனம் வழங்கலாம் என்பது அரசின்
பொதுவான ஆணையாகும்.
2.மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில், கீழ்க்கண்ட
முன்நிபந்தனைகளின் (Pre-requisite) அடிப்படையில் மறுநியமனம் வழங்குவதற்கு அனுமதி
வழங்கப்பட்டது:- 0 ஆசிரியரின் பண்பு மற்றும் நடத்தை திருப்திகரமாக இருத்தல்
வேண்டும். (0) தொடர்ந்து பணிபுரியும் வகையில் உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட இரு நிபந்தனைகளுடன் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளுக்கு ஓராண்டிற்கு
முன்னர் ஆசிரியரின் ஒய்வூதிய கருத்துருக்கள் மாநிலக் கணக்காயருக்கு
அனுப்பப்பட்டிருக்க வேண்டும் (Pre-requisite) என்று கூடுதலாக, மேலே இரண்டில்
படிக்கப்பட்ட அரசாணையில், மூன்றாவது நிபந்தனையாக விதிக்கப்பட்டது. மேலும், 2003-ஆம்
ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வுத் திட்டம் நடைமுறைக்கு வந்ததை முன்னிட்டு 2003-ஆம்
ஆண்டிற்குப் பிறகு நியமனம் பெற்று ஓய்வூதியத் திட்டத்தின்
3. மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2003ஆம் ஆண்டு முதல் பங்களிப்பு
ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்ததை முன்னிட்டு 2003ஆம் ஆண்டிற்கு பிறகு நியமனம்
பெற்று பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ்வரும் ஆசிரியர்களுக்கு பணியிலிருந்து
ஓய்வுபெறும் நாளுக்கு ஓராண்டுக்கு முன்னர் ஓய்வூதிய கருத்துருக்கள் மாநில
கணக்காயருக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை பொருந்தாது என்பதால்
அவர்களுக்கு அந்நிபந்தனையினை தளர்வு செய்து அவர்களுக்கு மறுநியமனம் அளிக்கும் போது
ஓய்வு பெறுவதற்கு முன்னர் கடைசியாக பெற்ற ஊதியமே மறுநியமன காலத்திற்கு ஊதியமாக
வழங்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
4. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட
அரசாணையில், அரசு / அரசு நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் -உபரி ஆசிரியர்களில் கல்வியாண்டின்
இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு
இறுதிவரை மறுநியமனம் அளிக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய ஒருங்கிணைந்த வழிகாட்டு
நெறிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
5. மேலே ஐந்தாவதாகப்
படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதத்தில், நடப்பு கல்வியாண்டு (2022-2023)
முதல் அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்
கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படின்
கல்வியாண்டு முடியும் வரை அப்பணியிடம் பூர்த்தி செய்யப்படாத நிலையில் கற்றல்
கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையினை தவிர்க்கவும்,
மாணவர்களின் கல்வி நலன் கருதியும் கற்பித்தல் பணி பாதிக்கக் கூடாது என்பதை
கருதியும் கடந்த ஆண்டுகளைப் போலவே ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் இறுதி வரை
மறுநியமன அடிப்படையில் பணிநீடிப்பு வழங்குவதற்கு அனுமதி அளித்து ஆணை வழங்குமாறு
அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
6. பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவினை அரசு
கவனமுடன் பரிசீலித்தது. மாணவர்களின் கல்வி நலன் கருதி, கற்பித்தல் பணிபாதிக்கக்
கூடாது என்பதை கருதத்தில் கொண்டு, 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் மேலே
நான்காவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த வழிகாட்டு
நெறிமுறைகளை பின்பற்றி அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்
ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை (Upto the end of Academic
Session) தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் வழங்க அரசு அனுமதி அளித்து
ஆணையிடுகிறது....2475/FS/P/2022,
7. இவ்வாணை நிதித்துறையின் நாள் 23.06.2022இல்
பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி) காகர்லா உஷா, அரசு
முதன்மைச் செயலாளர். பெறுநர் பள்ளிக் கல்வி ஆணையர், சென்னை-6. தொடக்கக் கல்வி
இயக்குநர், சென்னை-6. பள்ளிக் கல்வித் துறையின் கீழுள்ள அனைத்துத் துறைத்
தலைவர்கள்.
நகல்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் சிறப்பு
நேர்முக உதவியாளர், சென்னை-9. நிதித் (கல்வி-II) துறை, சென்னை-9. மனிதவள
மேம்பாட்டுத் துறை, சென்னை-9. முதன்மைச் செயலாளர் அவர்களின் முதுநிலை தனிச் செயலர்,
பள்ளிக் கல்வித் துறை, சென்னை-9. அனைத்துப் பிரிவுகள், பள்ளிக் கல்வித் துறை,
சென்னை-9. // ஆணைப்படி அனுப்பப்படுகிறது// O 28/6/22 பிரிவு அலுவலர். 28/06/2022