மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (01.02.2025) நடைபெற்ற துறை ரீதியான ஆய்வு கூட்டத்தின் முழு விவரம்

0 MINNALKALVISEITHI
மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (01.02.2025) நடைபெற்ற துறை ரீதியான ஆய்வு கூட்டத்தில் 2025-26ஆம் ஆண்டின் மானிய கோரிக்கையின் போது மேற்கொள்ளப்படவுள்ள புதிய நீர்த்தேக்கங்கள், தடுப்பணைகள், புதிய பாசன கட்டுமானங்கள், பாசன கட்டுமானங்களின் மறுசீரமைப்பு, ஏரிகள் தூர்வாருதல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர மண்டலங்களில் உள்ள பாசன கால்வாய்கள் சிறப்பு தூர்வாருதல் மற்றும் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட பாசன கட்டுமானங்களை விரைவில் சீரமைத்தல் குறித்தும் சட்ட மன்ற உறுப்பினர்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நீர்வளத்துறை சம்பந்தமான கோரிக்கைகள் குறித்தும் பொறியாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. 

இக்கூட்டத்தில், நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். க.மணிவாசன், இ.ஆ.ப., சிறப்பு செயலாளர் திரு.எஸ்.ஸ்ரீதரன், முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), திரு. சா. மன்மதன், நீர்வளத்துறை, மண்டல தலைமைப் பொறியாளர்கள். செயலாக்க பிரிவு தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.