19.02.2025 புதன்கிழமை, சென்னை, மாநிலக் கல்லூரியில் 'தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்'

0 MINNALKALVISEITHI
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 10.12.2024 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்களின் பிறந்தநாள், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டவாறு, 19.02.2025 புதன்கிழமை, சென்னை, மாநிலக் கல்லூரியில் 'தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்' கொண்டாடப்படவுள்ளது. 
உ.வே.சாமிநாதையர் ஆனந்த வருடம் மாசி மாதம் 9 ஆம் தேதி திங்கள் கிழமை (19-02-1855) அன்று கும்பகோணத்துக்கு அருகே உள்ள உத்தமதானபுரம்" எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதர் என்ற பெயரைச் சுருக்கி உ.வே.சா. என அழைக்கப்பட்டார். தமிழறிஞரான உ.வே.சா. அவர்கள் அழிந்து போகும் நிலையில் ஓலைச் சுவடிகளிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றையும் தேடித்தேடி. அச்சிட்டுப் பதிப்பித்தவர். தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டினால், இவரைத் தமிழ்த்தாத்தா என மக்கள் அன்போடு அழைத்தனர். அச்சுப் பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர்! உ.வே.சா.அவர்கள் 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப் பதித்தது மட்டுமின்றி 3000-க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரித்திருந்தார். 

உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிராப்பள்ளி மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்! உ.வே.சா. அவர்கள். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த உ.வே.சா. அவர்கள், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். உ.வே.சாமிநாதையர் மட்டும் தோன்றியிருக்காவிட்டால், தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநானூற்றிற்கும், புறநானூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றி பதிப்பித்து நமக்குத் தந்தவர் உ.வே.சா. அவர்கள். மேலும், தன்னுடைய சொத்துக்களை கூட விற்று, பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார்! தமிழ்த் தாயின் தலைமகனான உ.வே.சாமிநாதையர். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகளும், தாராளம், பட்ட சிரமங்களும் ஏராளம்: இருப்பினும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்! 

உ.வே.சா. அவர்கள். சங்க இலக்கியங்களை இன்று நாம் படிப்பதற்கு உ.வே.சா அவர்களே காரணம். சங்ககால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிகிறது என்றால் உ.வே.சாமிநாதையரின் அருந்தொண்டே காரணம்: இல்லையென்றால் ஓலைச்சுவடிகளில் இருந்த இலக்கியங்கள் கரையானுக்கு இரையாகி, மண்ணோடு மண்ணாகியிருக்கும். இவ்விலக்கியங்கள் இல்லாத தமிழையும், தமிழிலக்கியத்தையும் யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளை பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து, மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருளும் விளங்கும்படி செய்தார். 

ஆசிரியர் குறிப்பு. நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களை குறித்த முழு புரிதலுக்கும் வழி வகுத்தார். ஒப்பரிய தமிழ்ப் பணிகள் புரிந்து ஓங்குபுகழ்பெற்ற உயர்தனிப் பெரும்புலவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் 67601 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 10.12.2024 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார். அதன்படி, 19.02.2025 புதன்கிழமை சென்னை, மாநிலக் கல்லூரியில் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்' கொண்டாடப்படவுள்ளது. 'தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்' தொடக்க நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் விழாப் பேருரை ஆற்றவுள்ளார். 

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு. வே. ராஜாராமன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையுரை ஆற்றவுள்ளார். மாநிலக் கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் இரா. இராமன் அவர்கள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஒளவை ந. அருள் அவர்கள் வரவேற்புரையும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் திருமதி கு.ப. சத்தியபிரியா அவர்கள் நன்றியுரையும் ஆற்றவுள்ளனர். தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. 'உ.வே.சாமிநாதையரும் சுவடி தேடலும்' என்ற தலைப்பில் முனைவர் ப.சரவணன் அவர்களும் 'உ.வே.சாமிநாதையரின் பதிப்புச் செம்மை' என்ற தலைப்பில் முனைவர் க.பலராமன் அவர்களும் 'உ.வே.சாமிநாதையரின் சிந்தாமணிப் பதிப்பு' என்ற தலைப்பில் முனைவர் மு.முத்துவேல் அவர்களும் 'உ.வே.சாமிநாதையரும் காந்தியும்' என்ற தலைப்பில் திருமதி சித்ரா பாலசுப்பிரமணியன் அவர்களும் 'உ.வே.சாமிநாதையரின் நன்றி மறவாப் பண்பு' என்ற தலைப்பில் முனைவர் சீதாபதி ரகு அவர்களும் உ.வே.சாமிநாதையரின் உரைநடைப் பங்களிப்பு' என்ற தலைப்பில் முனைவர் இரா.வெங்கடேசன் அவர்களும் கருத்துரை வழங்கவுள்ளனர். 

கருத்தரங்க நிகழ்வைத் தொடர்ந்து "தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிப் பங்களிப்பில் பெரிதும் விஞ்சி நிற்பது உ.வே.சாமிநாதையரின் பழந்தமிழ்ப் பற்றே! நவீனப் பதிப்பு நெறிகளே" என்ற தலைப்பில் நடைபெறவுள்ள பட்டிமன்றத்திற்கு தாமல் கோ. சரவணன் அவர்கள் நடுவராகவும் பழந்தமிழ்ப் பற்றே! என்ற தலைப்பில் செல்வன் நா. பூபாலக்கண்ணன், செல்வி அ. இராஜேஸ்வரி, செல்வன் மா. சரண்ராஜ் ஆகியோரும் நவீனப் பதிப்பு நெறிகளே! என்ற தலைப்பில் செல்வி ர.தமிழ். செல்வி நொ.சுபலட்சுமி. செல்வன் அ.முகிலன் ஆகியோரும் பங்கேற்று வாதிடவுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான மேற்கொண்டு வருகிறது. முன்னெடுப்புகளைத் தமிழ் வளர்ச்சித் துறை

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.