மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு
சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து, புதுதில்லியில் நடைபெற உள்ள உலக பாரா
தடகள கிராண்ட் ப்ரீ 2025 போட்டி, கஜகஸ்தான் நாட்டில் நடைபெற உள்ள ஜூனியர் உலக
கோப்பை வாள்வீச்சு போட்டி ஆகிய போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள 18 வீரர்,
வீராங்கனைகளுக்கு செலவீனத்திற்காக மொத்தம் ரூ. 16.70 லட்சத்திற்கான காசோலைகளை
வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று
(7.2.2025) புது தில்லியில் 8.3.2025 முதல் 11.3.2025 வரை நடைபெறவிருக்கும் உலக
பாரா தடகள கிராண்ட் ப்ரீ (World Para Athletic Grand Prix) 2025 போட்டியில்
பங்கேற்கவிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வீரர்-வீராங்கனைகளுக்கு செலவீன
தொகையாக தலா 65 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 10.40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து வழங்கினார்.
தொடர்ந்து, கஜகஸ்தான் நாட்டில் 14.2.2025 முதல் 16.2.2025 வரை உலக வாள்வீச்சு
கூட்டமைப்பு (FIE) நடத்தும் ஜூனியர் உலக கோப்பை வாள்வீச்சு போட்டியில் பங்கேற்க
உள்ள தமிழ்நாடு வீராங்கனை செல்வி. பிளெஸ்ஸிலா சங்மா, வீரர் திரு. ப. அரவிந்தன்
ஆகியோருக்கு செலவீன தொகையாக தலா ரூ. 3.15 லட்சம் வீதம் ரூ.6.30 லட்சத்திற்கான
காசோலைகளையும் சேர்த்து கூடுதல் மொத்தமாக 18 வீரர். வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.
16.70 லட்சத்திற்கான காசோலைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து
வழங்கினார்.
மேலும் லடாக் யூனியன் பிரதேசம், லே நகரத்தில் 24.1.2025 முதல் 27.1.2025 வரை
நடைபெற்ற கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற
தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீரர்-வீராங்கனைகள் மாண்புமிகு தமிழ்நாடு துணை
முதலமைச்சர் அவர்களை சந்தித்து பாராட்டும். வாழ்த்தும் பெற்றனர். இப்போட்டியில்
பங்கேற்க 11 தமிழ்நாடு வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை
சார்பில் செலவீன தொகையாக ரூ. 7.05 லட்சம் வழங்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல்
தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆப., மற்றும் அரசு
உயர் அலுவலர்கள், பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.