சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபம் மற்றும் திரு.ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் இரண்டையும் தலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கிறார்கள்

0 MINNALKALVISEITHI
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் நாள் : 27.01.2025 ரூ.5 கோடியே 70 இலட்சம் செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபம் ரூ.4 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் திரு.ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் இரண்டையும் 28.1.2025 அன்று திறந்து வைக்கிறார்கள் 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற கடந்த மூன்றரை ஆண்டுகளில், நாட்டிற்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்ட பெருமக்களின் தியாகங்களைப் போற்றி அவர்களுடைய சிலைகளையும் மணிமண்டபங்களையும், அரங்கங்களையும் அமைத்து வருங்கால இளைஞர்கள் அறிந்து உணர்ந்து பின்பற்றும் வண்ணம் 10க்கும் மேற்பட்ட நினைவரங்கங்களையும் 37 திருவுருவச் சிலைகளையும் திறந்து வைத்துள்ளார்கள்.

 மேலும் பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்குமான நினைவுச் சின்னங்களையும் அமைத்து வருகிறார்கள். இவை இந்தியாவிற்கே வழிகாட்டத் தக்கவையாகும். அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை 28.1.2025 செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வழுதரெட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் திரு.ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபம் இரண்டையும் திறந்துவைக்கிறார்கள். 

21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபம் வகுப்புரிமை எனும் ஒதுக்கீட்டு முறை நூறாண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி ஆட்சியில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இதனால், அதுவரை ஒடுக் வலியுறுத்தியதன் பயனாக இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இடஒதுக்கீட்டு முறை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இத்தகைய சமூக நீதிக்கான தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில் 1987ஆம் ஆண்டு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் நடைபெற்ற போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. 

அந்தப் போராட்டத்தில் அன்றைய அரசின் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான 21 சமூக நீதிப் போராளிகளின் உயிர்த் தியாகத்திற்கும் போராட்டத்திற்கும் நியாயம் வழங்கிடும் வகையில், 1989ஆம் ஆண்டு அமைந்த முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்துக் கொடுத்து, அவர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வழங்கி கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சம வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. அது மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்வந்தவர்களின் முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துத் தந்தது. 

1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற அந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தைப் போற்றி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் 2.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண். 110 இன் கீழ் அறிவித்தவாறு விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் ரூபாய், 5 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் திரு.ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் முன்னாள் அமைச்சர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்கள் 1918-ஆம் ஆண்டு ஜுன் 15-ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள தேங்காய்திட்டு கிராமத்தில் ஆனையப்பர் - மீனாட்சி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். பேரறிஞர் அண்ண முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ஏ.ஜி. என புகழப்பட்ட ஏ.கோவிந்தசாமி அவர்களைக், "கொள்கைக் குன்றம்" என்று போற்றியுள்ளார். ஏ.ஜி அவர்களின் கல்விப் பங்களிப்பினைப் போற்றும் வகையில் திண்டிவனத்தில் தொடங்கப்பட்ட அரசு கலைக் கல்லூரிக்கு, "ஆ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி" எனப் பெயர் சூட்டினார். ஆடம்பரத்தின் நிழல் சிறிதும் படராத எளிய குணத்தாலும், நிறைந்த புகழாலும், அனைவராலும் விரும்பப்பட்ட ஏ.கோவிந்தசாமி அவர்கள்.

 1969-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள் இயற்கை எய்தினார். சென்னை பெசன்ட்நகர் இடுகாட்டில் அரசு மரியாதையுடன் ஏ.ஜி அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டபோது தந்தை பெரியார் அவர்கள் தம் உடல் நிலை சரியில்லாத போதும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் என்பது இவருடைய பெருமைக்கு மேலும் புகழ் சேர்ப்பதாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களின் பெருமையினை நினைவுகூரும் வகையில் விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் நினைவு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் தமிழ்நாடு அரசின் சார்பில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்கள் நினைவு அரங்கத்தையும். 1987 ஆம் ஆண்டில் நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தையும் நாளை 28.1.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்குத் திறந்துவைத்துச் சிறப்பிக்கிறார்கள். 


إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.