பஞ்சாப் மாநிலத்தில் உள்ள
ஃபரித்கோட் அரசு கல்வியியல் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய அவர். திருக்குறள் மீது
மிகுந்த பற்று கொண்டவராக விளங்கினார். "மனிதர்கள் மீதான அன்பை மையப்படுத்தியதாகவே
திருக்குறள் திகழ்கிறது; அதனையேதான் குருநானக் அவர்களும் பரப்புரை செய்தார்" என்று
கூறிய அவர், குறளின் கருத்துகளை எடுத்துச்சொல்லும் தூதுவராக. திருக்குறளைப் பஞ்சாபி
மொழியில் மொழிபெயர்த்தார்.
அவரது இந்தப் பணிட செம்மொழித் தமிழாய்வு மத்திய
நிறுவனத்தால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறந்த அறிஞராக விளங்கிய
அவரது மறைவு, தமிழ்நாட்டுக்கும் பஞ்சாப் மாநிலத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
தந்தையை இழந்து வாடும் திரு. ககன்தீப் சிங் பேடி அவர்களுக்கும், அவரது பிரிவால்
துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த
இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மாண்புமிகு முதலமச்சர்
அவர்கள், திருககன்நீப் சிங் பேடி இஆப., அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு
ஆறுதல் தெரிவிந்நார்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
அரசின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள: Indiprnews tndiprtndipr TN DIPR
www.dipr.tn.gov.in TNDIPR, Govt.ofTamil Nadu