பெருந்திரளணி குறித்த அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறையை துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

0 MINNALKALVISEITHI
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (Jamboree) மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரௗணி விழாவை கொடியேற்றி தொடங்கி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்று. வைர விழா பெருந்திரளணி குறித்த அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார். 
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இன்று (28.1.2025) பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (Jamboree) மற்றும் முத்தமிழறிஞர் சுலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை கொடியேற்றி தொடங்கி வைத்து. அணிவகுப்பு மரியாதையை ஏற்று. வைர விழா பெருந்திரளௗணி குறித்த அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார். முன்னதாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். 

அமைக்கப்பட்ட புகைப்படக் சாரண, உலக அளவில் இளைஞர்களுக்கான சீருடை இயக்கமாக திகழும் சாரணியர் இயக்கத்தின் Jambon என்றழைக்கப்படும் பெருந்திராணி ஒவ்வொரு நட்டிலும் நன்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றது. 

இந்தியாவில் தற்போது வரை 18 பெருந்திரளணிகளும். 5 சிறப்பு பெருந்திரளணிகளும் நடைபெற்றுள்ளன. தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பாக 2000 -ம் ஆண்டில் மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் சென்னை துரைப்பாக்கத்தில் சாரண, சாரணியர் இயக்க பொன்விழா பெருந்திரளணி நடைபெற்றது. இந்தியாவில் 7.11.1950 அன்று பார்த சாரண, சாரணிய அமைப்பு உருவாக்கப்பட்டு. 

தற்போது 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 450 கூடாரங்கள். ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்கள் தங்குவதற்காக 40 கூடாரங்கள், அலுவலகப்பணிக்காக 32 கூடாரங்கள் என மொத்தம் 2,422-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் பங்கேற்கும் சாரண, சாரணியர்கள் அனைவருக்கும் உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

பாதுகாப்பிற்காக 350-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் மருத்துவ சேவை வழங்கிடும் வகையில் 25 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவ கூடாரங்கள் மற்றும் 15 நடமாடும் மருத்துவ வாகனங்கள், அவசர உதவிக்காக 15-க்கும் மேற்பட்ட அவசர சேவை ஊர்திகளும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் திரு.டி.கே.சிவக்குமார். 

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு கர்நாடக சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு.U.T.காதர் ஃபரீத், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வி. செ.ஜோதிமணி, திரு.துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அ.சௌந்தரபாண்டியன், திரு.எம்.பழனியாண்டி. திருப.அப்துல் சமது, மரு.வை.முத்துராஜா, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன், துணை மேயர் திருமதி.திவ்யா. சமுகநலத்துறை செயலாளர் திருமதி.ஜெயூரீ முரளிதரன் இ.ஆ. பள்ளிக்கல்வித் துறை செயலாளர் திருமதி.எஸ்.மதுமதி இஆய, தமிழ்நாடு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.