மாண்புமிகு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று (29.1.2025)
தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகள்
சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்வில், நவம்பர் 2024 பெங்களுரில் நடைபெற்ற உலக
குதிரையேற்ற (Equestrian) கூட்டமைப்பின் உலக ட்ரெஸ்ஸேஜ் சாலஞ்ச் போட்டியின்
(Federation Equestrian International's World Dressage Challenge) யூத் பிரிவில்
தங்க பதக்கம் வென்றதன் மூலம் ஆசியாவின் சிறந்த யூத் ரைடர் (Best Youth Rider) என்ற
பட்டத்தையும் உலக குதிரையேற்ற தரவரிசையில் ஐந்தாம் இடமும் பிடித்த தமிழ்நாடு
வீராங்கனை செல்வி.
மிராயா தாதாபோய் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு துணை
முதலமைச்சர் அவர்கள் பாராட்டும். வாழ்த்தும் தெரிவித்தார். தொடர்ந்து, மகாராஷ்ட்ரா
மாநிலம் நாக்பூரில் 17.1.2025 முதல் 21.1.2025 வரை நடைபெற்ற 69 வது ஜூனியர் தேசிய
பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாடு பெண்கள் அணி
வீராங்கனைகள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து
பெற்றனர்.
மேலும், மலேசியாவில் 10-வது ஆசிய பசிபிக் காதுகேளாதோர் போட்டிகளில்
கலந்துகொள்ள தமிழ்நாடு காதுகேளாதோர் சங்கத்தின் சார்பில் நிதியுதவி
கேட்டுக்கொண்டதற்கிணங்க, 16.11.2024 அன்று தமிழ்நாடு சாம்பியன் அறகட்டளை மூலம் தலா
ரூ.20,000/- வீதம் 11 வீரர், வீராங்கனைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு துணை
முதலமைச்சர் அவர்கள் ரூ.2,20,000/- நிதியுதவி காசோலைகளை வழங்கி வாழ்த்து வாழ்த்து
தெரிவித்து வழி அணுப்பிவைத்தார்.
இப்போட்டியில் 4 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4
வெண்கல ஷர்ட்டுகளை வழங்குவதன் அடையாளமாக சென்னை
நேரு விளையாட்டரங்க விளையாட்டு விடுதியைச் சேர்ந்த 8 மாணவ, மாணவிகளுக்கு
வழங்கினார். இந்நிகழ்வுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு
கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி. இ.ஆப.. மற்றும் அரசு
உயர் அலுவலர்கள் விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகள், பயிற்றுநர்கள் கலந்து
கொண்டனர்.
