முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

0 MINNALKALVISEITHI
முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.08.2024 சுதந்திர தினவிழா உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என அறிவித்தார்கள். 

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருந்தகம் இணையதளம் www.mudhalvarmarundhagam.tn.gov.in முதல்வர் என்ற அமைக்க மூலம் விண்ணப்பிக்கலாம். 

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில் முனைவோர், இணையதளம் மூலம் 05.02.2025 -க்குள் விண்ணப்பிக்கலாம். அங்காறு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு. தருதியின் அடிப்படையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ளப்படும். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு. 110 சதுரஅடிக்குக் குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம், எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்துவரி ரசீது (அல்லது) குடிநீர்வரி ரசீது (அல்லது) மின் இணைப்பு ரசீது. 

வாடகை இடம் எனில், இடத்திற்கான உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்தப் பத்திரம் (Rental Agreement Documents) பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு, அரசு மானியம் ரூ.3.00இலட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.