பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

0 MINNALKALVISEITHI
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.474.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 5 திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, கன்னிகாபுரம் பகுதியில் ரூ.59.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார். 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (31.1.2025) வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் நடைபெற்று வரும் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம், கணேசபுரம் மேம்பாலம், ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் 776 புதிய குடியிருப்புகள், தண்டையார்பேட்டை பேருந்து நிலையம் என 474 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 திட்டப் பணிகளின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மேலும், கன்னிகாபுரம் பகுதியில் 59 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தனி கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோக மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். வடசென்னை வளர்ச்சித் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்த போது வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு பணிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வடசென்னை மக்களின் மேம்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்திடும் வகையில், 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், "சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்ச  புதிய பேருந்து முனையங்கள் மற்றும் பணிமனைகளை தரம் உயர்த்துதல் மற்றும் கட்டுமானம், முக்கிய பகுதிகளில் துணை மின்நிலையங்களை நிறுவுதல், போதைப்பொருள் மீட்பு மறுவாழ்வு மையம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை அமைத்தல், சிசிடிவி கேமராக்களை பொருத்துவதன் வாயிலாக பாதுகாப்பினை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக உயர்தர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணி, குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்றல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கடற்கரைகள், வணிக சந்தைகள், சலவையகம், குருதி சுத்திகரிப்பு மையங்கள் போன்ற உட்கட்டமைப்பு கட்டுமானங்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 14.03.2024 அன்று சென்னை, தங்கச் சாலையில் 2,097 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 87 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இத்திட்டமானது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, எரிசக்தித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் விரிவடைந்து தற்போது 6,309 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 252 திட்டங்களாக அதிகரித்துள்ளது. இதில் 29 திட்டப் பணிகள் முடிவடைந்து, 166 திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

எஞ்சிய பணிகள் விரைந்து தொடங்கப்படும். இப்பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (31.1.2025) வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் 5 திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, ஒரு புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதன் விவரங்கள்: கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் வடசென்னை வளர்ச்சி உணவு விடுதி வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள சர்வதேச தரத்திலான கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையத்தின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 கன்னிகாபுரம் பகுதியில் தனி கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோக மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் அதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில், திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் 59 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தனி கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இக்குடிநீர் விநியோகம் மூலம் சுமார் 3500 குடியிருப்புகளைச் சேர்ந்த 80,000 மக்கள் பயன்பெறுவார்கள். 

கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் பின்னர், திரு.வி.க.நகர், கன்னிகாபுரத்தில் 12.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3.75 ஏக்கர் பரப்பளவில் 20.315 சதுர அடியில் தரைதளம் மற்றும் 2 தளங்களாக கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விளையாட்டு மைதானமானது, கால்பந்து மைதானம், பார்வையாளர்களுக்கான காட்சிக்கூடம், 2 மட்டைப்பந்து பயிற்சி வலைகள், சிலம்பம் மற்றும் கபடி பயிற்சி மைதானம், பூப்பந்து அரங்கம், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான உடற்பயிற்சி கூடங்கள், குத்துச்சண்டை வளையம், குழந்தைகள் விளையாடும் இடம். வயதானவர்க திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி ஜீவா இரயில் நிலையம் அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், 678 மீட்டர் நீளம் மற்றும் 15.20 மீட்டர் அகலத்துடன், 226 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கணேசபுரம் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் 776 புதிய குடியிருப்புகள் தொடர்ந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ஸ்டான்லி மருத்துவமனை சாலையில், 3,26,612 சதுர அடி கட்டடப் பரப்பளவில், வாகன நிறுத்தும் தளம் மற்றும் 9 தளங்களுடன் 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தொகுதிகளாக கட்டப்பட்டு வரும் 776 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்புதிய குடியிருப்புகளில் 853 இருசக்கர வாகன நிறுத்துமிடம், 8 மின்தூக்கிகள், 20 தண்ணீர் தொட்டிகள், சூரியசக்தி நீர் சூடேற்றிகள், 20,412 சதுர அடி பரப்பளவில் திறந்தவெளி இயற்கைப் பகுதி போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. 

தண்டையார்பேட்டை பேருந்து நிலையம் பின்னர், தண்டையார்பேட்டையில், 1.86 ஏக்கர் பரப்பளவில், அடித்தளம், தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் 21.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தண்டையார்பேட்டை பேருந்து நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பேருந்து நிலையத்தின் அடித்தளத்தில் 157 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 23 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள், தரை தளத்தில் 15 பேருந்துகள் நிறுத்துமிடம், 4 கடைகள், 2 மின்தூக்கிகள், காத்திருப்பு இடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, ATM வசதி, முதல் தளத்தில் மேலாளர் பணிகள் அனைத்தும் காலதாமதமின்றி உரிய காலத்திற்குள், தரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

இந்த ஆய்வின்போது. மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான திரு.பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தாயகம் கவி, திரு. ஜோசப் சாமுவேல், திரு. அ. வெற்றியழகன். திரு- ஆர். மூர்த்தி. திரு- ஆர்.டி. சேகர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் திரு.ப. ரங்கநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் திரு. அ. சிவஞானம், இ.ஆ.ப. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநர் திரு.செ. சரவணன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள் திரு.கே.ஜே. பிரவீன் குமார். இ.ஆ.ப., திரு.வி. சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.