வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி

0 MINNALKALVISEITHI
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை (TN BEAT EXPO-2025) நேற்று (25.01.2025)தொடங்கி வைத்த மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் நிகழ்ச்சியின் இன்றைய (26.01.2025) நிறைவு விழாவில் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் கலந்து கொண்டு பங்கேற்ற தொழில் முனைவோர் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் வணிகர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள். 

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை (TN BEAT EXPO- 2025) மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆகியோர்களால் 25.01.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சியின் இன்றைய 26.01.2025 நிறைவு விழாவில் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் கலந்து கொண்டு பங்கேற்ற தொழில் முனைவோர் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் வணிகர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைமூலமாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(தாட்கோ) சார்பாக இரண்டாவது முறையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சி கருத்தரங்கம் (TN BEAT EXPO -2025 ) சென்னை நந்தம்ப்பாக்கம் வர்த்தக மையத்தில் 25.01.2025 மற்றும் 26.01.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. 

இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தில் பள்ளி மாணவ/ மாணவிகளிடையே காணப்படும் உடல் நலம் குறித்த இரத்தசோகை நோயை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்ப நலன்அட்டை லாரி ஓட்டுநரின் வழித்தடங்களில் ஏற்படும் பிரச்சனைகள், கட்டணங்கள் தொடர்பான ஆலோசனைகளை தெரிந்து கொள்ளக்கூடிய தொழில் நுட்பம், Al செயற்கை நுண்ணரிவு ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளை அலசி ஆராயும் தொழில நுட்பம் மற்றும் வேர்வை உணவு பொருட்களான கேரட்,நெல்லிக்காய்,இட்லிபொடி மற்றும் சத்துபாணம் பொருட்கள் போன்ற தொழில் நுட்ப செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தொழில் முனைவோர்களை ஊக்கவிக்கவும். 

அவர்கள் மேம்பாடு அடையும் வகையில் தொழில் நுட்பங்களை எடுத்துரைக்கப்பட்டது. . இக்கண்காட்சியில் ஆதிதிராவிடர் பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட 15,000-க்கும் மற்றும் மேற்பட்ட பொருட்களும் 500 அரங்கங்களிலும், வணிக நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகன உதிரி பாகனங்கள், இரசாயனப் பொருட்கள், மின் மற்றும் மின்னணுவியல், வேளாண்மை கருவிகள், கட்டுமான தொழில் சார்ந்த உபகரணங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் என 300 அரங்குகள், அரசு பொதுத்துறையை சார்ந்த  பூம்புகார் நிறுவனம், தமிழ்நாடு மினரல்ஸ் லிமிட்டேட், சிறுதொழில் வளர்ச்சி கழகம், ஆவின், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கம் நிறுவனம் போன்ற 30 அரங்குகள் 

மேலும் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் மூலம் 15 அரங்குகள் அமைக்கப்பட்டு 35,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர். மேலும் இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியில் குறு,சிறு தொழில் செய்பவர்கள், சுய உதவி தொழில் செய்பவர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே நேரடி விற்பனையை ஊக்குவித்தனர். 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழக தலைவர் திரு உ.மதிவாணன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.எஸ். சரவணக்குமார் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் திருமதி. க.லட்சுமி பிரியா, இஆ.ப., அவர்கள், தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு க.சு.கந்தசாமி, இ.ஆ.ப.,அவர்கள், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு.ச.அண்ணாதுரை, ம.தொ.ப. துரய்மைப் பணியாளர்கள் நல வாரிய உபதலைவர் திருமதி கனிமொழி பத்மநாபன் செயல்தலைவர் திரு.கோவிந்தராஜ் இ.ஆ.ப., (ஓய்வு) மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் , அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.