புதிய மருத்துவமனை கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆய்வு

0 MINNALKALVISEITHI
பெரியார் நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில், கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திருஎ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 
சென்னை, கொளத்தூர், பெரியார் நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.109.82 கோடி மதிப்பீட்டில், 97 ஆயிரம் சதுரடியில், 6 தளங்களுடன் கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை இன்று (24.01.2025) மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

ஆய்வுக்குப்பின் மாண்புமிகு மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் பழைய மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில் புனரமைத்து புதுப்பிக்க, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்தார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், கூடுதலாக 300 படுக்கைகளுடன் புதுப்பிக்கப்பட வேண்டுமென்று இப்பகுதி மக்கள் சார்பில், கோரிக்கை வைத்தார். இக்கோரிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்று, முதல் கட்டமாக ரூ.55 கோடி கோடி ஒதுக்கீடு செய்தார். 

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் கோரிக்கையின்படி, கூடுதலாக 300 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 2ஆவது கட்டமாக ரூ.54.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு : வாரகாலத்திற்குள் 100% பணிகள் நிறைவடைந்து விடும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பிப்ரவரி மாதத்தில், பெரியார் நகர் அரசு பொது மருத்துவமனையை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். 

இந்த மருத்துவனையில் 6 அறுவைச் சிகிச்சை மையம், மாற்றுத்திறனாளிகள் தனி சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவம், முழு உடல் பரிசோதனை, பணியாற்றும் மருத்துவர், செவிலியர் தங்கும் அறை, MRI ஸ்கேன், சி.டி. ஸ்கேன் மற்றும் இரத்த வங்கி என பல்வேறு வசதிகள் கொண்ட மருத்துவமனையாக கட்டப்பட்டு வருகிறது. 

தனியார் மருத்துவமனைக்கு இணையாக, கொளத்தூர், பெரியார் நகர் அரசு பொது மருத்துவமனை கட்டமைக்கப்பட்டு உள்ளது. கொளத்தூர், பெரியார் நகர் அரசு பொது மருத்துவமனை, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 3 ஆயிரம் பேர் வரை சிகிச்சைக்கு வரலாம். ஏற்கனவே புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனையில் 2000 பேர் வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

ஒட்டுமொத்தமாக 5000 பேர் இந்த அரசு பொது மருத்துவமனைக்கு புறநோயாளியாக வருவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்கள். வள்ளுவர் கோட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதை தொடர்ந்து, அமைச்சர் அவர்கள். வள்ளுவர் கோட்டத்தை. தை மாதம் திறக்க முயன்றோம். பெரும் மழையினால் காலதாமதம் ஏற்பட்டது. வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றி வெளிப்பூச்சு வேலை அதிகமாக உள்ளது. 

கட்டடத்தின் உள்பகுதியில் வேலை குறைவுதான் இன்னும் அதிகபட்சம் 60 நாட்களில் வள்ளுவர் கோட்டப் பணிகள் அனைத்தும் முடிந்து விடும் என்று தெரிவித்தார். திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 6 வழிச்சாலை அமைக்க, நிலஎடுப்பு பணிகளுக்கு செலவினம் 2009 ஆம் ஆண்டு. ரூ.10 கோடியாக இருந்தது. தற்பொழுது நிலஎடுப்புப நடைபெற்று வருகிறது. விரைவாக அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். 

செய்தியாளர்களுக்குப் பதிலளிக்கையில், திருஅருட்பிரகாச வள்ளலாரையும் அய்யன் திருவள்ளுவரையும் நாங்கள் கைவிடவில்லை. திமுக தான் கொண்டாடுகிறது. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அய்யன் வள்ளுவருக்கு சிலை நிறுவியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் என்றும், அய்யன் திருவள்ளுவர். மதத்திற்கு அப்பாற்பட்டவர். அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர். 

அதனால்தான் வள்ளுவர் எழுதிய திருக்குறளை உலகப் பொதுமறை நூல் என்று சொல்கிறோம் என்று தெரிவித்தார். உ கன்னியாகுமரியில் பொறிக்கப்பட்ட கற்கள் சான்றாக உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள சிறு குழந்தையை கேட்டால் கூட தெரியும். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்தான், அய்யன் திருவள்ளுவர் சிலையை அமைத்து, திறந்து வைத்தார் என்று செய்தியாளர்களிடம் கூறினார். 

இந்த ஆய்வின்போது. சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் திருமதி இரா.பிரியா, பொதுப்பணித்துறை சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் திருஎஸ்-மணிகண்டன், கண்காணிப்புப் பொறியாளர் திரு.எஸ்-முத்தமிழ் அரசு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.