மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பள்ளிக்
கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவினை பார்வையிட்டு. மாநில அளவில்
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருது, பரிசு கோப்பை மற்றும்
சான்றிதழ்களை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி
ஸ்டாலின் அவர்கள் இன்று (24.1.2025) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்
கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் சூழல் பாதுகாப்பு அனைவரின்
பொறுப்பு என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளின்
கலைநிகழ்ச்சியை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து மாநில அளவில் வெற்றி பெற்ற 466
மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் முகமாக, மேடையில் 23 மாணவ, மாணவிகளுக்கு கலையரசன்,
கலையரசி விருது, பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை ஏதோ ஒரு கலைநிகழ்ச்சியை,
ஒரு ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்தினோம் என்று இல்லாமல், ஒரு சிறந்த விழிப்புணர்வை
ஏற்படுத்துகின்ற வகையில்,
சூழல் பாதுகாப்பு அனைவருடைய பொறுப்பு என்ற தலைப்பில் அந்த
கலை நிகழ்ச்சிகள் நடத்திய அத்தனை பேருக்கும் மீண்டும் எத்தனை முறை பாராட்டினாலும்
அது மிகையாகாது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு எங்கும்
நடத்தப்பட்ட அந்த கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்றைக்கு
கலையரசி, கலையரசன் என்ற விருதுகளை வழங்கும் இந்த சிறப்புக்குரிய விழாவில் பங்கேற்று
உங்களை எல்லாம் சந்தித்து உங்களிடத்தில் உரையாடுவதில் நான் மிகுந்த பொதுவாக,
பெரியவர்கள் பெருமையடைகின்றேன்.
குழந்தைகளுக்கு, மாணவ நாளைக்கு உங்களுடைய உலகமாக
இருக்கப் போகின்றது. நீங்கள் அறிவுரை மட்டும் வழங்கவில்லை, ஆர்டரும்
வழங்கியிருக்கிறீர்கள். இது எங்களுடைய உலகம், அதை பத்திரமாக பார்த்து எங்கள் கையில்
ஒப்படையுங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதற்கான பொறுப்பை எங்களிடத்தில்
வழங்கியிருக்கிறீர்கள். இங்கே வந்திருக்கக்கூடிய கலையரசர்கள், கலையரசிகள் உங்களை
எல்லாம் பார்க்கும்போது, ஒரு புதுவித உற்சாகம், உணர்ச்சி ஏற்படுகின்றது.
தமிழ்நாட்டு மாணவர்கள் நீங்கள் எக்ஸ்டிரா ஸ்பெஷல். ஏனென்றால், பிற மாநிலங்களில்
உள்ள மாணவச் செல்வங்கள் எல்லாம் ஏதாவது விஷயத்தில் ஸ்பெஷலிஸ்-டாக இருப்பார்கள்,
படிப்பில் விளையாட்டில் ஆர்வமாக இருப்பார்கள். Extra Curricular அல்லது
activities-ல் கொஞ்சம் குறைவான ஆர்வம் கொண்டு இருப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டு
மாணவர்களான நீங்கள் மட்டும் தான் படிப்புலயும் டாப், Sports- லேயும் டாப்,
Extra-Curricular Activities-லேயும் டாப். இப்படி எல்லா வகையிலும் சாதித்துக்
கொண்டு வருகிறீர்கள். விளையாட்டுத்துறை அமைச்சராக எனக்குத் தெரியும்.
இந்திய அளவில்
தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில் மட்டுமல்ல, கலையிலும் அரசர்கள், என்பதை
நிரூபிக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடெங்கும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 46 லட்சம் மாணவர்கள் இந்த
கலைத்திருவிழாவில் பங்கேற்று உங்களுடைய திறமையை நீங்கள் வெளிப்படுத்தி
இருக்கின்றீர்கள். உங்கள் அத்தனை பேரும் என்னுடைய வாழ்த்துகளை இந்த நிகழ்ச்சியின்
மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, மாநில அளவிலானப் போட்டிகளில்
மட்டும் கிட்டத்தட்ட 13 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவச் செல்வங்கள் பங்கேற்று
அதிலிருந்து இத்தனை மாணவர்கள் இங்கே தந்திருக்கின்றீர்கள். வருகை இதுவரைக்கும்,
கடந்த 3 ஆண்டு காலமாடாக்டர் கலைஞர் குறித்து உங்களுக்கு தெரியும். அவரது பெயரே
கலைஞர். அவர்களுக்கு பல முகங்கள் உண்டு.
எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைக்கதை
ஆசிரியர், பாடல் ஆசிரியர், அரசியல்வாதி, முதலமைச்சர் இப்படி பல துறைகளிலும்
முத்திரை பதித்தவர்தான் டாக்டர் கலைஞர் அவர்கள். இத்தனை துறைகளிலும் மிகப்பெரிய
ஆளுமையாக இருந்தாலும், கலைஞர் என்ற பெயர்தான் அவர்களுக்கு நிலைத்தது. இங்கே
வந்திருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள் நீங்கள் மிகச் சிறந்த கலைஞர்கள் என்பதை இந்த
மேடையில் நீங்கள் நிரூபித்திக் காட்டியிருக்கிறீர்கள்.
கலைஞர் அவர்களின் வழியில்,
நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மாணவர்கள் நீங்கள்
ஒவ்வொருவரும் கலை சார்ந்து உங்களுடைய ஸ்கில்ஸை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று தான்
இந்த கலைத்திருவிழாவை நடத்த உத்தரவிட்டார்கள். கல்வியை பொறுத்தவரை தொடக்கக் கல்வி
முதலே இல்லம் தேடி கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண்
திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன்
திட்டம், இப்படி ஏராளமான திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு, நம்முடைய
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உங்களுக்காக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
கல்வியில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மாணவர்களான நீங்கள் அனைத்துத் துறைகளிலும்
முதல்வர்களாக இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர்
அவர்களது ஒரே இலட்சியம். கல்வி நிலையங்களில், கல்வி எந்தளவு முக்கியமோ, அதேயளவு
உங்களின் சிந்தனைகளை தூண்டுவதற்கான முயற்சிகளும் மிக மிக முக்கியம்.
கடந்த 3
ஆண்டுகளில் இதேபோல நடைபெற்ற கலைத்திருவிழாக்களில் வெற்றி பெற்ற பலரை இன்றைக்கு நாம்
பல்வேறு தொலைக்காட்சிகளில், ரியாலிட்டி ஷோக்களில் சாதிப்பதை, பல பாராட்டு இந்த
கலைத்திருவிழா, உங்களின் திறமைக்கான ஒரு Launch Pad- ஆக இருக்கும் என்பதில் எந்தவித
மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்
அரசுப்பள்ளி மாணவர்கள் உங்களின் நலனுக்காக உழைக்கிறார்.
சில நேரங்களில்
பார்க்கும்போது, பெருமையாக இருக்கும். என்னுடைய நெருங்கிய நண்பர் அவர். அதே
நேரத்தில் பொறாமையாக இருக்கும். ஏனென்றால், பாதி நேரம் வெளிநாட்டில் சாதித்த
மாணவர்களோடு சுற்றுலாவில் தான் இருப்பார். இப்போது பேசும்போது கூட சொன்னார். இந்தக்
குழந்தைகள் கேட்கிறதா? கேட்கிறதா? என்று கேட்கும்போது, நாங்கள் டெல்லிக்கு
குழந்தைகளை அழைத்துச் சென்று கேட்குதா, கேட்குதான்னு டெல்லியில் கேட்கப்போகிறோம்
என்று. நிச்சயம் அமைச்சர் அதை செய்யவேண்டும். அந்த மாணவர்களின் குரல் நிச்சயம்
டில்லியில் கேட்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. கடந்த திங்கள்கிழமை கூட
நான் ஒரு செய்தியைப் பார்த்தேன்.
தென்காசியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள்,
மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் நம்முடைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
அவர்களின் ஏற்பாட்டில் வந்திருக்கிறார்கள். உங்களுடைய எல்லையில்லா மகிழ்ச்சியை
என்றும் காண வேண்டும் என்பதை மனதில் கொண்டு தான் நம்முடைய அமைச்சர் அவர்கள்
தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள்.
உங்கள் திறமைக்கு பரிசாக உலகின் எந்த
மூலைக்கும், வாழ்வின் எந்த உயரத்துக்கும் அழைத்துச் செல்ல நம்முடைய திராவிட மாடல்
அரசும், நம்முடைய முதலமைச்சர் அவர்களும் உங்களுக்கு என்றும் துணை நிற்பார்கள்.
இங்கே நான் வழக்கமாக சொல்கிற ஒரு விஷயத்தை மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
விளையாட்டுத்துறைக்கான அமைச்சர் என்கிற வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
அவர்களுக்கும், ஆசிரியர் பெருமக்களுக்கும் இங்கு கலையரசன் - கலையரசிகளாக
வெற்றி பெற்று வந்துள்ள உங்கள் அத்தனைப் பேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொன்னதுதான்,
உங்களிடமிருந்து எதை வேண்டுமானாலும் பறித்துவிடலாம். ஆனால் கல்வியை மட்டும் என்றுமே
பறிக்கமுடியாது. உங்களிடமிருந்து பிரிக்கமுடியாத சொத்து என்னவென்றால், கல்வி
மட்டும்தான். மாணவச் செல்வங்களாகிய நீங்கள் முதலமைச்சர் அவர்கள் சொன்னதுபோல,
உங்களுடைய வேலை படிப்பது மட்டும் தான். படியுங்கள் மீதம் உள்ள அத்தனையையும் நான்
பார்த்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் அவர்கள் கூட இருக்கிறார்.
வந்திருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய
பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து விடைபெறுகிறேன் என்று மாண்புமிகு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த விழாவில் மாண்புமிகு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன்,
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு,
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர
சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர்
திருமதி.சோ.மதுமதி,இ.ஆ.ப., தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின்
மேலாண்மை இயக்குநர் திரு.பொ.சங்கர்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரஷ்மி
சித்தார்த் ஜகடே,இ.ஆ.ப., ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர்
மரு.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., உள்பட அரசு உயர் அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ,
மாணவியர்கள் கலந்து கொண்டனர்.