பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கவும் பாலியல் குற்றங்களிலிருந்து
குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை
மட்டும் விசாரிப்பதற்காக, 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், போதைப்பொருள்
இல்லாத தமிழ்நாடு உருவாக்கும் இலக்குடன், போதை மருந்துகள் மற்றும் மன மயக்கப்
பொருட்கள் சட்டம், 1985-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும்
விசாரிப்பதற்கென, 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், மற்றும் மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு
உத்தரவு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும்.
இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும்
தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில். தமிழ்நாடு முழுவதும் நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளின் நிலை
குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், போக்சோ வழக்குகளின் விவரம், தற்போதைய நிலை
மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கென
கூடுதலாக தேவைப்படும் நீதிமன்றங்கள் ஆகியவை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
விரிவாக கேட்டறிந்தார். ஆய்வின் அடிப்படையில், இவ்வழக்குகளின் விசாரணையை
விரைவுபடுத்தி, குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்குச் சட்டப்படி உரிய தண்டனை
பெற்றுத் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும். அனைத்து
மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்களை அமைப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.
ஏற்கெனவே பாலியல்
குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம். 2012-ன் கீழ் பதிவு
செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக, மாநிலத்தில் 22 சிறப்பு
நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவது மற்றும் 4 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பாட்டிற்கு
வரும் நிலை ஆகியவற்றையும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக்
கருத்தில்கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி 12 புதிய
சிறப்பு நீதிமன்றங்களும், 14 கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் என மொத்தம் 26 புதிய
சிறப்பு நீதிமன்றங்கள் ரூபாய் 46.59 கோடி செலவில் அமைக்க அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள 47 காவல் மாவட்டங்களுக்கு
மொத்தம் 52 சிறப்பு நீதிமன்றங்கள் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை
பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விரைவாக
விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், இம்மாதிரியான கொடுமையான குற்றங்கள்
மீண்டும் நடைபெறுவதை தடுக்க ஏதுவாக மிக அதிகபட்ச தண்டனையும் குற்றவாளிகளுக்கு
பெற்றுத் தருவது உறுதி செய்யப்படும்.
மேலும், தமிழ்நாடு அரசின் "போதைப்பொருள்
இல்லாத தமிழ்நாடு" (Drug-Free Tamil Nadu) இயக்கத்தின் ஒரு பகுதியாக, போதைப்பொருள்
கடத்தல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதுடன், போதைப்பொருள்கள் மற்றும்
மனமயக்கப் பொருள்கள் சட்டத்தின் (NDPS Act) கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை உரிய
சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விரைந்து விசாரித்து முடிப்பதற்கும் அரசு பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, தமிழ்நாட்டில் 11 சிறப்பு
நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இச்சட்டத்தின் கீழ் நிலுவையில்
உள்ள அனைத்து வழக்குகளையும் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டியதன் அவசியத்தைக்
கருத்தில் கொண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும்,
காஞ்சிபுரம்.
திருவள்ளூர் மற்றும் வேலூர் ஆகிய 3 இடங்களில் தலா ஒரு சிறப்பு
நீதிமன்றமும், சென்னையில் ஒரு கூடுதல் சிறப்பு நீதிமன்றமும் என மொத்தம் 4 புதிய
சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம்,
மேற்காண் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து
முடிப்பதற்கும், நீதித்துறை நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், போதைப்பொருள்
இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் அரசின் இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படுவதற்கும்
வழிவகை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment