பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்தல் - புதிய பெயர்ப் பலகைகள் - தொடக்கக் கல்வி - Minnalkalviseithi

Latest

Thursday, 3 September 2026

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்தல் - புதிய பெயர்ப் பலகைகள் - தொடக்கக் கல்வி



தொடக்கக் கல்வி – பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்தல் – திட்ட தொடக்க விழாவிற்கு முன்னதாக அனைத்து பள்ளி மையங்களிலும் புதிய பெயர்ப் பலகைகள் (Name Boards) நிறுவுதல் – தொடர்பாக. 

பார்வை:

1. அரசாணை (நிலை) எண்.20, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, நாள்: 15.07.2026. 2. சென்னை-5, சமூக நல இயக்குநரின் கடிதம் ந.க.எண்.3060456/சஉதி-2(1)/2026, நாள்: 29.08.2026. 

பார்வை (1)-இல் காணும் அரசாணையின்படி தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இத்திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 15,14,274 மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, இத்திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்படும் மையங்களிலும் மற்றும் 6–8 ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்பட உள்ள அனைத்து பள்ளி மையங்களிலும், “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயர் பலகையினை, கீழ்க்காணும் விவரக்குறிப்பு மற்றும் வடிவமைப்பின்படி அச்சிட்டு, திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்னதாகவே பள்ளி மையங்களில் நிறுவிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பார்வை–2 இல் காணும் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், இத்துடன் இணைப்பில் வழங்கப்பட்டுள்ள மாதிரி பெயர்ப் பலகையில், பள்ளியின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், பெயர்ப் பலகை நிறுவப்படும் பள்ளியின் உரிய விவரங்களை குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய பெயர் பலகைகளை உரிய முறையில் நிறுவுவதுடன், பெயர் பலகையின்  அளவு, வண்ணம், விவரக்குறிப்பு மற்றும் வடிவமைப்பு ஆகியவை ஒரே சீராக இருப்பதை உறுதி செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு/அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் சார்பாக பெயர் பலகை, இணைப்பில் கண்டுள்ளவாறு, திட்ட தொடக்க விழாவிற்கு முன்னதாக அனைத்து பள்ளி மையங்களிலும் நிறுவுவதற்கு வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சார்ந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று காலை உணவுத் திட்டம் செயல்படும் பள்ளிகளில் புதிய பெயர் பலகைகள் நிறுவப்பட்ட விவரங்களை உறுதி செய்து, அறிக்கை மற்றும் புகைப்படங்களை (GIS Photo) அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மாவட்ட அளவில் தொகுத்து [deeksection.tn@gmail.com] (mailto:deeksection.tn@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment