திரு.வி. கலியாணசுந்தரனார் அவர்களின் 143-ஆவது பிறந்த நாள்
திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து
மலர் வணக்கம் செய்தல்
26.08.2026
தமிழ் உரைநடையைப் பாமரரும் படிக்கும் வண்ணம்
எளிமைப்படுத்தி,
எழிலூட்டி வழங்கியவரும் சொற்களின் பொருளில் புதுமை கண்டவரும்
தமிழ்த்தென்றல்
என
அனைவராலும்
போற்றப்படுபவருமான
திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் 143-ஆம் பிறந்தநாள் 26.08.2026
புதன்கிழமையன்று அமைகிறது. திரு.வி.க (திருவாரூர் விருத்தாசலம்
கலியாணசுந்தரனார்) அவர்கள் தற்போதுள்ள சென்னை மாவட்டம், மதுரவாயல்
வட்டம், துண்டலம் கிராமத்தில் 26.08.1883 அன்று பிறந்தார். இவர் சென்னை
இராயப்பேட்டையிலுள்ள வெசுலிப் பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம்
நா.கதிரைவேற்பிள்ளை மற்றும் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ்க்கல்வி
கற்றவர்.
திரு.வி.க. அவர்கள் தேசபக்தன், திராவிடன், நவசக்தி போன்ற நாளிதழ்களில்
ஆசிரியராகப் பணியாற்றியதன்மூலம் சிறந்த இதழாசிரியராகவும் தமிழ்நாட்டில்
தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத்
முன்னேற்றத்திற்கும் பாடுபட்டதன்மூலம்
திகழ்ந்தவராவார்.
தொழிலாளர்களின் உரிமைக்கும்
சிறந்த தொழிற்சங்கவாதியாகவும்
தூய தமிழை உயர்த்திப் பிடித்த திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்கள் சிறந்த
மேடைப் பேச்சாளர். 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்', 'பெண்ணின் பெருமை',
'வாழ்க்கைத் துணை', 'உள்ளொளி', 'உரை நூல்கள்', 'பெரிய புராணம் குறிப்புரையும் –
வசனமும்', 'முருகன் அல்லது அழகு', 'இலங்கைச் செலவு'(பயணநூல்) போன்ற
55க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய சிறந்த எழுத்தாளராகவும் தமிழுக்கு
தொண்டாற்றியுள்ளார்.
'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற கொள்கைக்கு ஏற்ப சிறப்பு வாய்ந்த
தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் புகழைப் போற்றும்
வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை எழும்பூரிலுள்ள தமிழ் வளர்ச்சி
இயக்ககத்தில் திரு.வி.க. அவர்களின் திருவுருவப் படத்திற்கு 26.08.2026
புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யும்
நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்.
தமிழறிஞர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment