சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாக, சார் சி.வி. ராமன் அறிவியல் கட்டிட TNT Hub அலுவலகத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாக ராஜன் இன்று. 09.10.2025, அனைத்து ஊடகங்களுக்கும் அறிவித்த செய்தி வெளியீடு.
TANFINET Corporation
தற்போதுள்ள நிலையில், 11.800-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் கண்ணாடி இழை கம்பி வடம் (OFC) வழியாக இணைக்கப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அக்டோபர் 11ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் காணொளிக் காட்சி (VC) வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
இந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தின்போது. அமைக்கப்பட்டுள்ள OFC உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் பிரதிநிதிகளுடன் நேரடி காணொலி உரையாடல் நடத்துவார்கள். உள்ள
இது மாநிலம் முழுவதும் உள்ள 10,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு நேரலையாக ஒளிபரப்பப்படும்.
தொழில் பங்கீட்டாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் மாற்றங்கள்:
தொடக்கத்தில், கிராம பஞ்சாயத்து வாரியாகச் சேவை வழங்குநர்களை (Franchisee Partners) தேர்ந்தெடுப்பதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. கிராம பஞ்சாயத்து வாரியான அறிவிப்பிற்குத் தகுதியானவர்களிடம் இருந்து குறைந்த அளவிலான ஆர்வமே வெளிப்பட்டது.
கிராம பஞ்சாயத்து வாரியாகச் செயல்பட்டால் வருவாய் குறைவு மற்றும் வீட்டு இணைப்புகளுக்கும், நெட்வொர்க் பராமரிப்புக்கும் போதுமான வருவாய் ஈட்டுவது சவாலாக இருக்கும். ONT (Optical Network Terminal) நிறுவுவதற்கான செலவை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய சூழல் இருந்தது.
மேற்கண்ட குறைகளைச் சரிசெய்து, தற்போது மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த மேலாண்மைக் கட்டமைப்பை உருவாக்குவதே இலக்காகும். கிராம பஞ்சாயத்து வாரியாகத் தொழில் பங்கீட்டாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக மாவட்ட வாரியாகத் தொழில் பங்கீட்டாளர்களைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம். பொதுமக்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்காமல், குறைந்த செலவில் ONT கருவிகளை நிறுவி, தரமான இணையச் சேவையை வழங்குவது உறுதி செய்யப்படும். மக்கள் பெரிய அளவில் முதலீடு செய்யாமல் தரமான இணையச் சேவையைப் பெறுவதே இதன் நோக்கம்.
விரைவில் கிராமப் பகுதிகளில் உள்ள இல்லங்களுக்கு இணைய மற்றும் OTT சேவைகளை ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
