கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகள், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயம் மற்றும் சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயம் - முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்

0 MINNALKALVISEITHI

2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகள், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயம் மற்றும் சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.10.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில், பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு 2021. 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளையும். பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் கலை வித்தகர்களுக்கான அகில விருதுகளையும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயத்தையும் வழங்கி சிறப்பித்தார். இந்திய

2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதிற்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என பிரிக்கப்பட்டு, கலைமாமணி விருது பெறத் தகுதியுள்ள கலைஞர்களைத் தேர்வு செய்திட கலைப் பிரிவு வாரியாக வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன. இவ்வல்லுநர் குழுக்களால் அளிக்கப்பட்ட தகுதியுள்ள கலைஞர்களின் பெயர்ப் பட்டியல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரையை ஏற்று 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியல் தமிழ்நாடு அரசால் 24.9.2025 அன்று அறிவிக்கப்பட்டது.

சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குதல்

அதன்படி. 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை ஆண்டிற்கு தலா 30 கலைஞர்கள் வீதம், மொத்தம் 90 கலைஞர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கி சிறப்பித்ததோடு, கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயத்தையும் வழங்கினார். (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

கலை வித்தகர்களுக்கான சிறப்பு விருதுகள் வழங்குதல்

அதனைத் தொடர்ந்து, அகில இந்திய விருது பெறும் கலை வித்தகர்களுக்கான பாரதியார் விருதினை (இயல்) முனைவர் ந. முருகேசபாண்டியன் அவர்களுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதினை (இசை) பத்மவிபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் சார்பில் அவரது மகன் திரு. விஜய் யேசுதாஸ் அவர்களிடமும், பாலசரசுவதி விருதினை (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள் அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். விருதாளர்களுக்கு விருதுடன் ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கத்தையும் வழங்கினார்.

சிறந்த கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழுவிற்கு கேடயங்கள் வழங்குதல்

மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கான கேடயத்தினை சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கத்திற்கும் (ராஜா அண்ணாமலை மன்றம்). சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற் கேடயத்தை மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள கலைமாமணி எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றத்திற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். கேடயங்களை பெற்ற சிறந்த கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழுவிற்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கினார்.

இந்த விழாவில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. தயாநிதி மாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. அசன் மௌலானா, திரு. பிரபாகரராஜா, துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் திரு. இரா. முத்தரசன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் திரு. வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் திருமதி விஜயா தாயன்பன், சுற்றுலா. பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் திருமதி கவிதா ராமு, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களின் விவரம்







إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.