துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று (9.10.2025) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் ஆற்றிய உரை

0 MINNALKALVISEITHI

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று (9.10.2025) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் 28.14 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 49.59 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 5,478 பயனாளிகளுக்கு 61.45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான உதவிகளை வழங்கிய நிகழ்ச்சியில் ஆற்றிய உரை அரசு நலத்திட்ட

இன்றைக்கு திண்டுக்கல் வேடசந்தூர் சட்டமன்ற மாவட்டத்திற்கு தொகுதியில் வருகை தந்து நடைபெறுகின்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேருக்கு 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் சந்தித்து உங்களுக்கு வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். பெருமையடைகின்றேன்.

இன்றைக்கு மட்டும் வேடசந்தூர், குஜிலியம்பாறை ஒன்றியங்களில் சாலைகள். பள்ளிக்கூட கட்டடங்கள், பாலங்கள் என்று சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, துவங்கி வைத்திருக்கின்றோம்.

உங்களுடைய மாவட்ட அமைச்சர்கள் அண்ணன் இ பெரியசாமி அவர்களுக்கும். அண்ணன் சக்கரபாணி அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் காந்திராஜன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். அதுவும் உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் காந்திராஜன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை இன்றைக்கு தொலைக்காட்சியில் கூட பார்த்திருப்பீர்கள், பல்வேறு நலத்திட்ட பணிகளை நடத்தி முடித்திருக்கின்றார். இன்றைக்கு பல்வேறு வைத்திருக்கின்றோம். பணிகளை துவக்கி

அவர் மாண்புமிகு முதலமைச்சராக இருக்கட்டும். என்னையாக இருக்கட்டும். அமைச்சர்களாக இருக்கட்டும். எப்போது எங்களை சந்தித்தாலும், தன்னுடைய வேடசந்தூர் தொகுதிக்கு இந்த பணிகளை செய்து தர வேண்டும் என்று உரிமையோடு அந்த மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் தான் உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்.

அந்த வரிசையில் இன்றைக்கு சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டடங்கள். காமராஜர் பேருந்து நிலையக் கட்டடம், புதிய வகுப்பறைக் கட்டடங்கள் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை நாங்கள் துவங்கி வைத்திருக்கின்றோம்.

இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒரு கூடுதல் சிறப்பு என்னவென்றால், இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அண்ணன் இ.பெரியசாமி அவர்கள், அண்ணன் சக்கரபாணி அவர்கள் இருக்கின்றார்கள். அண்ணன் இ. பெரியசாமி அவர்களுடைய துறை நம்முடைய நாட்டினுடைய முதுகெலும்பு என்று சொல்லப்படுகின்ற கிராமங்களுடைய வளர்ச்சிக்காக, ஊரக வளர்ச்சித்துறை மூலமாக ஏராளமான திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகின்றார். அதனால் தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் கிராமங்கள் எல்லாம், நகரம் போல முன்னேறி வருகின்றது.

இன்றைக்கு தமிழ்நாட்டுக்கே உணவு அளிக்கின்ற அமைச்சர்தான் உங்களுடைய அமைச்சர் உங்களுடைய மாவட்டத்துக்காரர். உணவுத் துறை அமைச்சர் அண்ணன் சக்கரபாணி அவர்கள். அவருடைய துறையும் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்த இரண்டு அமைச்சர்களும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தலின்படி, வழிகாட்டுதலின்படி இன்றைக்கு திண்டுக்கல் மாவட்டத்தினுடைய வளர்ச்சிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காகவும் தங்களை அர்ப்பணித்து கொண்டு செயலாற்றி வருகிறார்கள்.

நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மக்களுக்கும் பயன்படுகின்ற வகையில் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இந்த நான்கரை வருடங்களில் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து, பார்த்து செயல்படுத்தி வருகின்றார். ஆட்சிக்கு வந்தவுடன் அவர் போட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் தான். தேர்தல் வாக்குறுதியில் சொன்ன வாக்குறுதி திட்டம் தான். இன்றைக்கு அந்த விடியல் பயணத்திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் இந்த நான்கரை வருடங்களில் சுமார் மேற்கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு சேமிக்கின்றார்கள். 800 கோடி பயணங்களை மகளிர் மகளிரும் மாதம், மாதம் 1000 ரூபாய்

அதே போல் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும் என்று. 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்தால் முதலில் காலையில் அவர்களுக்கு தரமான உணவு. முதலில் குழந்தைகள் பசியோடு வந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கு பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு அனுப்பி வைக்கின்றார்கள்.குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வந்தால் முதலில் தரமான உணவு, அதன்பிறகு தரமான கல்வி கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 22 இலட்சம் குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் பயன்பெற்று வருகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தினார். அந்த திட்டத்தை துவங்கி வைப்பதற்கு பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் சிங் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். அவர் நம்முடைய கூட்டணிக் கட்சி கிடையாது. ஆம் ஆத்மி இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் துவங்கி வைத்து முதலமைச்சர் அவர்களை பாராட்டி பேசினார். என்ன சொன்னார் தெரியுமா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் வாழ்த்துகள். மாணவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துகள். இது மிகச் சிறந்த திட்டம். முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை என்னுடைய பஞ்சாப் மாநிலத்திலும் அடுத்த வருடத்திலிருந்து நான் தொடங்கப் போகிறேன் என்று பெருமையாக சொல்லிவிட்டுச் சென்றார்.

அதே மாதிரி பள்ளிக்கூட குழந்தைகள் பள்ளிக்கூடத்தோடு நிறுத்திவிடக் கூடாது. கல்லூரிக்குச் செல்ல வேண்டும். உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கிய திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம். அரசுப் பள்ளியில் படித்து எந்த கல்லூரியில் படிக்க சென்றாலும், அது தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி அவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் மாதம் 1,000 ரூபாய் மாணவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 8 இலட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். அந்த திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரிவு படுத்தினார்கள். அதை துவங்கி வைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு தெலுங்கானா மாநிலத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ரேவந்த் ரெட்டி அவர்கள் வந்திருந்தார். அவர் பாராட்டிவிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே இது சிறப்பான திட்டம். அடுத்த நிதியாண்டிலிருந்து தெலுங்கானா மாநிலத்திலும் இந்த திட்டத்தை நான் விரிவுபடுத்த போகின்றேன் என்று பாராட்டிச் சென்றுள்ளார். இப்படி மற்ற மாநில முதலமைச்சர்களும் பாராட்டுகின்ற அரசாக நம்முடைய அரசும். நம்முடைய மாண்புமிகு சிறப்பாக செயல்பட்டுக் முதலமைச்சர் கொண்டிருக்கிறார்கள். அவர்களும்

முக்கியமாக இன்னொரு திட்டம், வந்திருக்கக்கூடிய சகோதரிகள் நீங்கள் பயன்பெற்று இருப்பீர்கள். அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். தேர்தல் அறிக்கையில் தலைவர் அவர்கள் சொன்ன வாக்குறுதி. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக. இந்த மாதம் இருபத்தைந்தாவது மாதம். 1 கோடியே 20 இலட்சம் மகளிருக்கு மாதம். மாதம் 1,000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் மகளிர். எங்களுக்கு வரவில்லை. எங்கள் பெயர் விடுபட்டு போய்விட்டது என்று அதை சரி செய்யத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சில தளர்வுகளை செய்திருக்கிறார்கள். சமீபத்தில் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் 10.000 முகாம்கள் நடத்தப்படுகிறது. அதில் 8,000 முகாம்கள் முடித்துவிட்டோம். அதில் 60 சதவீதம் மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தான் விண்ணப்பித்துள்ளார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் இன்னும் விடுபட்ட இலட்சக்கணக்கான மகளிருக்கு நிச்சயம் அந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1,000 ரூபாய் வந்து சேரும் என்ற வாக்குறுதியை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார். நிச்சயம் அதை செய்து காட்டுவார்.

இப்படி பல்வேறு முற்போக்கான திட்டங்களின் காரணமாக தான் இன்றைக்கு இந்தியாவிலேயே 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியோடு இன்றைக்கு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இங்கே மகளிர்தான் நிறைய பேர் வந்திருக்கின்றீர்கள். குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீது நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு தனி அக்கறை, பாசம் உண்டு. அந்த பொறுப்பை என்னுடைய துறையின் கீழ் கொடுத்து, நீ இதை பார்த்துக் கொள். தனி கவனம் செலுத்து என்று அறிவுறுத்தினார். இந்த நான்கு வருடங்களில் மட்டும் 1 இலட்சம் கோடிக்கு அதிகமான அளவில் வங்கி கடன் இணைப்புகளை நம்முடைய குழுக்களுக்கு நம் கொடுத்திருக்கின்றோம். அந்தவகையில் இந்த மேடையில் 5 ஆயிரம் குழு சகோதரிகளுக்கு சுமார் 34 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக்கடன் இணைப்புகளை வழங்க இருக்கின்றோம்.

அதுமட்டுமல்ல, உங்களுக்கு பயன்படுகின்ற வகையில், தமிழ்நாட்டினுடைய வரலாற்றிலேயே முதன்முறையாக உங்களுடைய கோரிக்கையை ஏற்று குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டையையும் கொடுக்க நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். அந்தப் பணிகளையும் ஆரம்பித்துவிட்டோம். இந்த அடையாள அட்டைகள் படிப்படியாக எல்லா குழுக்களுக்கும் விரைவில் வந்து சேரும்.

குழுக்கள் மூலமாக, இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பெண்கள் தொழில் முனைவோர்களாக வளர்ந்து கொண்டு வருகின்றார்கள். நீங்கள் இன்னும் பல உயரங்களைத் தொட நம்முடைய அரசு, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நம்முடைய துறை உங்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்.

அதே மாதிரி இங்கு பட்டாக்களையும் வழங்க இருக்கின்றோம். உங்கள் இடத்துக்கு பட்டா வேண்டும் என்பது உங்களுடைய பல வருட கோரிக்கை. பல தலைமுறை கோரிக்கை என்று கூட சொல்லலாம். உங்களுடைய உரிமையை, உங்களுடைய கனவை. நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு உண்மையாக்கி காட்டியிருக்கின்றார். அதை நிறைவேற்றி வைத்துள்ளது நம்முடைய அரசு. பட்டாவைத் தேடி அரசு பொதுவாக அலுவலகங்களுக்கு நீங்கள் அலைந்த காலம் போய், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நாங்களே வந்து உங்களை சந்தித்து உங்கள் வீட்டுமனைப் பட்டாக்களை கொடுக்க இருக்கின்றோம்.

மாணவர்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், விளையாட்டு வீரர்கள் என சமூகத்தினுடைய அனைத்து தரப்பு மக்களுக்காகவும் ஒன்று சேர்ந்து முன்னேற்றத்திற்காக உழைக்கின்றது நம்முடைய அரசு. மாநில உரிமைகளை சமூக நீதியை காக்கின்ற அரசாக நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை சொல்லி விடைபெற விரும்புகின்றேன். திண்டுக்கல்லில் பூட்டுதான் புகழ்பெற்றது என்று சொல்லுவார்கள். பூட்டு தான் வீட்டுக்கு பாதுகாப்பு. பூட்டு எப்படி வீட்டுக்கு பாதுகாப்போ, அதே மாதிரி நம்முடைய திராவிட மாடல் அரசு இந்த ஸ்டேட்டுக்கு பாதுகாப்பு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஸ்டேட்டுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கே நம்முடைய திராவிட மாடல் அரசுதான், நம்முடைய தமிழ்நாட்டு மக்கள் தான் பாதுகாப்பு என்பதை நீங்கள் உணர வேண்டும்.

உங்களுக்காக உழைக்க நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். எனவே இந்த அரசுக்கு நீங்கள் எப்போதும் போல வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலிலும் உங்களுடைய ஆதரவை கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டு, நலத்திட்ட உதவிகளைப் பெற்ற அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், வந்திருந்த சகோதரிகள் உங்கள் அத்தனைபேருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.