பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.10.2025
திருக்குறள்:
குறள் 961: இன்றி
அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். உரை: இன்றியமையாத சிறப்பை உடைய
செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட
வேண்டும். பழமொழி : Respect given is respect earned. மரியாதை கொடுத்தால், மரியாதை
தானாக கிடைக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும்
உயர்ந்த நிலையை அடைவர் 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.
பொன்மொழி :
படைப்பாற்றலின் கதவை திறக்கக்கூடிய சாவி கல்வி -அகதா கிறிஸ்டி
பொது அறிவு :
1.இந்தியாவில் கையால் நெய்யப்பட்ட கம்பளங்களுக்கு மிகவும் பிரபலமான நகரம் எது?
பதோஹி -உத்தரபிரதேசம் Bhadohi - Uttar Pradesh,
2. மூளையின் கட்டமைப்பு மற்றும்
செயல்பாடுகளை ஆய்வு செய்ய பயன்படும் கருவியின் பெயர் என்ன? என்செபலோகிராப்
Encephalography
English words :
Frigid - extremely cold, மிகவும் குளிர்ந்த தன்மை
Acknowledge – to accept or admit.ஒப்புக்கொள்
தமிழ் இலக்கணம்:
தமிழ் சொற்கள்
நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல்,
மற்றும் உரிச்சொல் ஆகும். பெயர்ச்சொல்: இது ஒரு நபரையோ, பொருளையோ, இடத்தையோ அல்லது
கருத்தையோ குறிக்கும் சொல் ஆகும். (எ.கா: மரம், சென்னை, ஓடுதல், அழகு).
அறிவியல்
களஞ்சியம் :
ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட நறுமணம் இருப்பதால், வாசனை சோப்புகளால்
ஏற்படும் பாதிப்புகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. மனிதர்கள் தேர்ந்தெடுக்கும்
சோப்புகளின் வாசனையும் அவர்களில் சிலரை மட்டும் கொசு கடிக்க ஒரு காரணமாக அமையலாம்
என்று ஐசயன்ஸ் (iScience) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ள இந்த கட்டுரை கூறுகிறது.
அக்டோபர் 14
அக்டோபர் 14 -
உலக தர நிர்ணய நாள் (World Standards Day) ஒவ்வொரு
ஆண்டும் அக்டோபர் 14 அன்று, ISO (தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பு), IEC
(சர்வதேச மின்தொழில்நுட்ப ஆணையம்) மற்றும் ITU (சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்)
ஆகியவற்றின் உறுப்பினர்கள் உலக தர நிர்ணய தினத்தைக் கொண்டாடுகிறார்கள், இது சர்வதேச
தரங்களாக வெளியிடப்படும் தன்னார்வ தொழில்நுட்ப ஒப்பந்தங்களை உருவாக்கும்
உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான நிபுணர்களின் கூட்டு முயற்சிகளுக்கு பாராட்டு
தெரிவிக்கும் ஒரு தினமாக கொண்டாடப்படுகின்றது.
நீதிக்கதை சொர்க்கமும் நகரமும்
அது
ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன்
வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம். ஒருநாள் அந்த
இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, ஏன் இருவரும்
வருத்தத்துடன் உள்ளீர்கள் என்று கேட்டது. பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால்
இந்த ஏரி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர்
வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல
இருக்கிறோம் என்று வாத்துகள் கூறியது. என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி
மனம் வந்தது. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே
போய்விடும். என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச்
செல்லுங்கள், என்றது ஆமை. உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே! உன்னை அழைத்துப்போக
எங்களால் எப்படி முடியும்? என்றது வாத்து. அதற்கு ஆமை ஓர் உபாயம் செய்யலாம், ஒரு
நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கொட்டியாய்
பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து
செல்லுங்கள், என்றது ஆமை. நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே
விழுந்து இறந்து விடுவாய் என்று வாத்துகள் கூறியது. அப்படியானால் பறக்கும்போது நான்
வாய் பசாமல் இருக்கின்றேன் என்று ஆமை கூறியது. இரு வாத்துகளும் இருபக்கமும்
குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன. சிறிது தூரம்
பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம்
சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய், என்று
கூறியது. செல்லும் வழியில் வாத்துகள் ஆமையுடன் பறந்து சொல்வதைப் பார்த்த மக்கள்
வாத்துகள் எதையோ தூக்கிக்கொண்டு கொண்டு போகின்றன என கூச்சலிட்டனர். ஆமையின் கெட்ட
நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது. இந்த மக்கள் ஏன் இப்படி
கூச்சலிடுகின்றனர் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே
விழத்தொடங்கியது. கீழே விழுந்த ஆமை உடல் சிதறி இறந்தது.
நீதி: வருமுன் காப்போனும்,
சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள்.
இன்றைய செய்திகள் 14.10.2025
⭐2025ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு
ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக
வழங்கப்படுகிறது
⭐ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை -
அமைச்சர் சிவசங்கர்
⭐ அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் போன்று பேசி 'டிஜிட்டல் கைது'
மூலம் ரூ.100 கோடி அளவுக்கு மோசடி செய்த 4 பேரை குஜராத்தின் சூரத்தில்
அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
⭐இரண்டு கட்டங்களாக 20
பிணைக்கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்: இஸ்ரேலில் உறவினர்கள் மகிழ்ச்சி
🏀
விளையாட்டுச் செய்திகள்
🏀ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன்: இந்திய வீராங்கனை ஜோஷ்னா
சின்னப்பா சாம்பியன். எகிப்தை சேர்ந்த 3ஆம் நிலை வீராங்கனையை வீழ்த்தினார். 38
நிமிடத்தில் வீழ்த்திய ஜோஷ்னாவுக்கு 15 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்பட்டது.
Today's Headlines
⭐Nobel Prize announced for 3 people Joel Mogir, Philip Achion
and Peter Howitt are awarded jointly. ⭐Strict action will be taken if
additional fares are charged on Omni buses said Minister Sivashankar ⭐
Enforcement Directorate officials have arrested 4 people in Surat, Gujarat, for
allegedly defrauding the public of Rs 100 crore through 'digital arrest' by
impersonating Enforcement Directorate officials. ⭐Hamas releases 20 hostages in
two phases: Relatives in Israel rejoice.
*SPORTS NEWS*
🏀Japan Squash Open:
Indian player Joshna Chinappa is the champion. She defeated the 3rd seeded
player from Egypt. Joshna, who defeated her in 38 minutes, was awarded a prize
of 15 thousand US dollars.
