2025 செப்டம்பர்: கலை பண்பாட்டுத்துறை சென்னையில் -ஓவியச் சந்தை திட்டம்

0 MINNALKALVISEITHI

கலை பண்பாட்டுத்துறை சென்னையில் 'ஓவியச் சந்தை'

கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக ஓவிய மற்றும் சிற்பக் கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில், சென்னையில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் 'ஓவியச் சந்தை' திட்டத்தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையின் அடிப்படையில் சென்னையில், 2025 செப்டம்பர் திங்களில் மூன்று நாட்கள் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ஓவியச்சந்தை திட்டம் செயல்படுத்திட கலை பண்பாட்டுத்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டினைச் சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்கள் இத்திட்டத்தில் பயன்பெற ஏதுவாக, தாங்கள் காட்சிப்படுத்தி, விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ள கலைப்படைப்புகளின் விவரங்கள், அதற்குரிய புகைப்படங்கள், கலைப் படைப்புகளின் விற்பனை தொகை ஆகிய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தினை 15.9.2025-க்குள், பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இயக்குநர்.

கலை பண்பாட்டுத்துறை.

தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம்,

தமிழ்ச் சாலை, எழும்பூர்,

-600 008.

விண்ணப்பங்களை கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.