மாண்புமிகு வேளாண்மை அவர்கள் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழ்நாட்டில் வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்திட ஏற்றுமதியாளர்கள், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEx) மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்ந்த அலுவலர்களுடன் 20.08.2025 இன்று நடைபெற்ற கலந்தாய்வுக்கூட்டம்.
மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்திட ஏற்றுமதியாளர்கள், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEX) வேளாண்மை உழவர் நலத்துறை சார்ந்த அலுவலர்களுடன் 20.08.2025 இன்று நடைபெற்ற கலந்தாய்வுக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதியாளர்கள் காணொலி மூலம் கலந்து கொண்டு தாங்கள் ஏற்றுமதி செய்யும் மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் விளைபொருட்கள். ஏற்றுமதி செய்வதில் ஏற்படும் இடர்ப்பாடுகள். அதனை நிவர்த்தி செய்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்பினை அதிகரித்திட கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் போன்ற பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில், மாம்பழக்கூழ், முருங்கை, பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், நிலக்கடலை, முண்டு மிளகாய், முந்திரி, முட்டை, சுவைதாளித மற்றும் நறுமணப்பொருட்கள், காய்கறிகள், பூக்கள், பழங்கள், நெல்லிக்காய், கறிவேப்பிலை, தேங்காய், வாழை, மருத்துவ பயிர்கள் போன்ற விளைபொருட்கள் மற்றும் அவற்றின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும் இதில் சில விளைபொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி, விலை ஏற்ற இறக்கங்கள். கடல்வழி, வான்வழி சரக்குக் கட்டண உயர்வு. கூடுதல் சரக்கு மற்றும் சேவை வரி. அளவை மிஞ்சிய நச்சுத்தன்மை, நச்சுத்தன்மை பரிசோதனைக்கு மிகுந்த கட்டணம், சரக்குக் கப்பல் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தால் எதிர்கொள்ளப்படும் செலவினங்கள். முருங்கைக்கான ஏற்றுமதிக் குறியீட்டு எண் (HSN Code), ஏற்றுமதி தேவைக்கான போதிய உற்பத்தியின்மை, பல்வேறு நாடுகளுக்கான ஏற்றுமதி தரநிலைகள் குறித்த விழிப்புணர்வின்மை போன்றவற்றால் ஏற்றுமதியில் போதிய முன்னேற்றம் அடைவதில் சிரமம் உள்ளதாக தெரிவித்தனர். மேலும் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.
அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்ததுடன், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் செயல்பாடுகளையும் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள், விரிவாக ஆய்வு செய்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.
இதில் விவசாயிகளுக்கு ஏற்றுமதித் தரத்தில் விளைபொருட்களை உற்பத்தி செய்வதற்கும். தகுந்த மதிப்புக்கூட்டல் மேற்கொண்டு உரிய சந்தையில் விற்பனை செய்திடவும், விளைபொருட்களுக்கு அதிக விலை பெறவும். தொடர்புடைய அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், குறிப்பாக தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் (TNAPEx) செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி வாய்ப்புகள் தொடர்பான கருத்தரங்குகள், கூட்டங்கள். கண்காட்சிகள் நடத்தப்பட்டு ஏற்றுமதி முன்னேற்றத்திற்கு வழிவகுக்க ஏதுவாக அடுத்த ஐந்து மாதங்களுக்கான கால அட்டவணை தயாரிக்க வேண்டும் என்றும் அதன்படி விவசாயிகள். ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்றுமதி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், முருங்கைக்கு ஏற்றுமதிக் குறியீட்டு எண் (HSN Code) பெறவும் தமிழ்நாட்டிற்கென ஏற்றுமதிக்கான தனித்துவ ஹோலோகிராம் உருவாக்கவும். வேளாண் வணிகத் துறையின் குளிர்பதனக் கிடங்குகள், சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைத்துப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEx) தொழில்முனைவோர்களுக்கும். விவசாயிகளுக்கும் பயிற்சி அளிப்பதோடு நின்றுவிடாமல் தொழில்முனைவோராக மாற்றிட வேண்டிய தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டந்தோறும் குறைந்தது 100 ஏற்றுமதியாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், எஞ்சிய நச்சு பரிசோதனை ஆய்வகங்களை தூத்துக்குடி, திருச்சி, கோவை, சென்னை ஆகிய நகரங்களில் ஏற்படுத்த அறிவிப்பு செய்யப்பட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், விவசாயிகளை அதிக அளவில் உணவு பதப்படுத்துவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் இணைப்பதையும், விவசாயிகளைத் தொழில்முனைவோர்களாக மாற்றி, புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குதல் மற்றும் அதிக அளவில் வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்தல் ஆகிய நோக்கங்களுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்.
இக் கலந்தாய்வுக் கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், திரு.வ.தட்சிணாமூர்த்தி. இ.ஆ.ப., வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் திரு.த.ஆபிரகாம், இ.ஆ.ப., வேளாண்மைத்துறை இயக்குநர். திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர், திரு.பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர். திரு. கோ. அழகுசுந்தரம், அப்பீடா மண்டல தலைவர், திருமதி. ஷோபனா குமார். நலத்துறையின் உயர் அலுவலர்கள் மற்றும் வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதியாளர்கள் (காணொலியில்) கலந்து கொண்டனர். வேளாண்மை-உழவர்